Advertisement

12:00:58
Thursday
26 April 2018

லின் டானிடம் தோல்வி கண்டார் சோங் வெய்

லின் டானிடம் தோல்வி கண்டார் சோங் வெய்
பிர்மிங்ஹம், மார்ச் 17: ஐந்தாவது முறையாக அகில இங்கிலாந்து பொது பூப்பந்துப் போட்டியின் வெற்றியாளர் பட்டம் வெல்லும் தேசிய பூப்பந்து வீரர் டத்தோ லீ சொங் வேய்யின் கனவு ஈடேறவில்லை. வெள்ளிக்கிழமை நடந்த காலிறுதி ஆட்டத்தில் சொங் வேய், 16 - 21, 17-21 என்ற புள்ளிகளில் தனது பரம வைரியான் சீனாவின் லின் டானிடம் தோல்வி கண்டார். 

ஐந்து முறை உலக வெற்றியாளர் பட்டம் வென்றுள்ள லின் டான், இரண்டு முறை சொங் வேய்யிடம் பின் தங்கியிருந்தாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சொங் வேய்யைத் தோற்கடித்தார். முதல் செட்டில் 16- 15 என்ற புள்ளிகளில் முன்னணி வகித்த சொங் வேய் இறுதியில் 16 - 21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார். 

அதேவேளையில் இரண்டாம் செட்டில் 13 - 10 என முன்னணியில் இருந்த சொங் வேய் மீண்டும் 17 - 21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார். இரண்டு முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற லின் டான், இம்முறை அகில இங்கிலாந்து பூப்பந்து பட்டத்தை வெல்ல இலக்கு கொண்டுள்ளார். 

இதனிடையே இந்த தோல்வி குறித்து தாம் கவலை அடையவில்லை என சொங் வேய் தெரிவித்தார். இந்த ஆண்டில் எஞ்சியிருக்கும் போட்டிகளில் கவனம் செலுத்த விருப்பதாக அவர் மேலும் சொன்னார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.