16:14:57
Tuesday
23 October 2018

செல்சியின் பயிற்சியில் மயங்கி விழுந்தார் கந்தே

செல்சியின் பயிற்சியில் மயங்கி விழுந்தார்  கந்தே
லண்டன், மார்ச் 6: செல்சியின் மத்திய திடல் ஆட்டக்காரர் எங்காலோ கந்தே கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மென்செஸ்டர் சிட்டிக்கு எதிரான பிரீமியர் லீக் ஆட்டத்திலும் அவர் விளையாடவில்லை என கூறப்படுகிறது. 

காய்ச்சல் காரணமாக கந்தே,மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக விளையாடவில்லை என செல்சி கிளப் தெரிவித்திருந்தது.  எனினும் செல்சியின் பயிற்சி மையமான கோபேஹம்மில் அவர் மயங்கி விழுந்ததாக ஈ.எஸ்.பி.என் செய்தி நிறுவனம் கூறுகிறது. 
செல்சியின் பயிற்சி முடிந்தவுடன் ஆட்டக்காரர்கள் உடை மாற்றும்  அறையில் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் மயங்கியதற்கான காரணத்தை செல்சி வெளியிடவில்லை. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாலி சிரி ஆ லீக் போட்டியில்  பியோரென்டினா அணியின் கேப்டன் டேவிடே அஸ்டேரி திடீர் மரணம் அடைந்திருப்பது கால்பந்து உலகில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.  உடல்நலக்குறைவால் தனது ஓட்டல் அறையில் திடீரென மரணம் அடைந்ததாக, பியோரென்டினா கிளப் தெரிவித்துள்ளது.



FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.