Advertisement

12:01:23
Thursday
26 April 2018

தேசிய முன்னாள் கோல் காவலர் சொவ் சீ கியோங் காலமானார்

தேசிய முன்னாள் கோல் காவலர் சொவ் சீ கியோங் காலமானார்
கோலாலம்பூர், பிப்.21: மலேசியாவின் மிகச் சிறந்த கோல் காவலர்களில் ஒருவரான சொவ் சீ கியோங் (வயது 69) இன்று புதன்கிழமை சிறுநீர்ப்பை புற்றுநோயால் காலமானார். 

1965ஆம் ஆண்டு தொடங்கி 1969ஆம் ஆண்டு வரை தேசிய கால்பந்து அணியில் மெர்டேக்கா கால்பந்துப் போட்டியில் விளையாடியுள்ள சொவ் சீ கியோங், 1968ஆம் ஆண்டில் மெர்டேக்கா கிண்ணத்தை வென்றார். 1970ஆம் ஆண்டுகளில் தொழில்முறை கால்பந்து ஆட்டக்காரராக உருவெடுத்த அவர், ஹாங்காங்கில் கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.  

ஜார்டின்ஸ் எப்.சொ. செளத் சீனா, ஹாங்காங் ரேஞ்சர்ஸ் எப்.சி போன்ற கிளப்புகளில் விளையாடினார். கோலாலம்பூரில் செயின்ட் ஜோன் பள்ளியில் பயின்று, 13ஆம் வயதில் தேசிய அளவில் 20 வயதுக்கு உட்பட்ட அணியில் சொவ் சீ கியோங் இடம்பெற்றார். பிரேசிலின் குரூசேரோ கிளப், ஒரு முறை சொவ் சீ கியோங்குக்கு அழைப்பு விடுத்தது. 

எனினும், சொவ் அந்த அழைப்பை நிராகரித்தார். மலேசியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குருசேரோ மீண்டும் சொவ் சீ கியோங்கிற்கு அழைப்பு விடுத்தது. இம்முறை பிரேசிலின் குடியுரிமைப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அந்த வாய்ப்பையும் சொவ் சீ கியோங் நிராகரித்திருந்தார். 

கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோல் காவல் விளையாட்டில் முழு கவனம் செலுத்தினார். சில வாரங்களுக்கு முன்னர் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சொவ் சீ கியோங் புதன்கிழமை காலையில் இயற்கை எய்தினார்.  


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.