Advertisement

12:01:16
Thursday
26 April 2018

ஏசிபி முனுசாமி தலைமையேற்ற பின்னர் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன!

ஏசிபி முனுசாமி தலைமையேற்ற பின்னர் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன!
கோலாலம்பூர், பிப். 20: செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முனுசாமி தலைமையில் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதை அறிந்து தாம் மகிழ்ச்சியடைவதாக மலேசிய மக்கள் சேவை மையத்தின் தேசியத் தலைவர் டத்தோ மலர்விழி குணசீலன் கூறினார். 

நேற்று முன்தினம் ஏசிபி முனுசாமி அவர்களைச் சந்தித்து செந்தூல் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு பகுதியிலுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி பேசியதாக செய்தியாளர் சந்திப்பில் டத்தோ மலர்விழி குணசீலன் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டில் பதிவான குற்றச் செயல்கள் தற்போது 40 விழுக்காடு குறைந்திருப்பதாக குற்றவியல் அறிக்கை குறிப்பிடுகிறது. போலீஸ் துறையினர் தங்கள் கடமையை சிறப்பாக செய்திருப்பதை இப்புள்ளி விவரம் புலப்படுத்துகிறது என்று அவர் புகழாரம் சூட்டினார். 

இங்குள்ள வீடமைப்பு பகுதிகளில் குறிப்பாக தாமான் வாயூ பகுதியில் இரவு நேரங்களில் வாகன திருட்டுச் சம்பவங்கள் வழக்கமான செயல்களாக இருந்தன. இப்பிரச்சினையைக் களைய தாமான் வாயூ மக்களுடன் தினமும் இரவில் ரோந்து பணியில் தாம் ஈடுப்பட்டதாக ஏசிபி முனுசாமி குறிப்பிட்டார். அதோடு பிரச்சினை உள்ள இடங்களில் ரோந்து பணிகளை துரிதப்படுத்தியதாகவும் அவர் இச்சந்திப்பில் தெரிவித்ததாக டத்தோ மலர்விழி குணசீலன் கூறினார். 

போலீசாரின் கடமையுணர்வை அவர் வெகுவாகப் பாராட்டி சிறந்த சேவையை வழங்கிய ஏசிபி முனுசாமி அவர்களுக்கு 'Jasa Mu Dikenang' என்ற விருதை வழங்கி கௌரவித்தார். இச்சந்திப்பில் செந்தூல் வட்டார காவல் நிலையத்தின் நடமாடும் ரோந்து பிரிவின் தலைவர் ஏ.எஸ்.பி ஹாசாமியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.