பெட்டாலிங் ஜெயா இபிஎஃப் கட்டடம் தீப்பற்றியது
By Admin | Published on : Feb 12, 2018 11:30 pm

பெட்டாலிங் ஜெயா, பிப்.13:
பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் அமைந்துள்ள ஊழியர் சேமநிதி வாரிய (இபிஎஃப்) கட்டடத்தில் நேற்று முற்பகல் 11.53 மணியளவில் தீப்பற்றியது.
இக்கட்டடத்திலிருந்து வெளியான கரும் புகை கூட்டரசு பிரதேச நெடுஞ்சாலையிலிருந்தே காணமுடிந்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு, மீட்பு அதிகாரிகள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடுமையாக முயற்சித்தனர்.
டாமான்சாரா, கிள்ளான் துறைமுகம், ஹங் துவா, பந்தாய் ஆகிய பகுதிகளில் இருந்து ஏறக்குறைய 43 தீயணைப்பு வீரர்கள் முயற்சித்தும் 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
இருப்பினும் இபிஎஃப் கட்டடத்தில் 40 விழுக்காடு தீயில் கருகியதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு நடவடிக்கை தலைவர் முகமட் ஹஃபிஸ் மாட் டலி தெரிவித்தார்.
தீ அலாரம் ஒலித்ததும் அனைத்து ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கட்டடத்திலிருந்து உடனடியாக வெளியேறியதால், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கட்டடம் தீப்பற்றி எறியும் காணொளியை தமிழ் முரசு ஃபேஸ்புக் பக்கத்தில் காணலாம்.