உலகத் தாய்மொழி நாள் முன்னோட்ட விழா
By Admin | Published on : Feb 12, 2018 08:58 pm

கோலாலம்பூர், பிப்.13: உலகத் தாய்மொழி நாள் 2018ஆம் ஆண்டையொட்டி 11ஆம் தேதி கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் முன்னோட்ட பன்மொழி கேளிக்கை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இந்த கேளிக்கை நிகழ்வு நடைபெற்றது. காலை 8.00 மணிக்கு மறுசுழற்சி பொருட்களைக் கொண்டு இடைநிலைப்பள்ளி மாணவர்கள் படம் வரைந்து அதனைப் பற்றி விளக்கம் அளித்தனர். ஒவ்வொரு குழுவிலும் மலாய், சீனர், இந்தியர், பூர்வக்குடியினர் இணைந்து படங்களை வரைந்தனர்.
9.00 மணியளவில் தமிழர்களின் பாரம்பரியமான கோலம் போடுதல், மருதாணி வரைதல், தோரணம் பின்னுதல், பல்லாங்குழி விளையாட்டு போன்றவை நடைபெற்றன. சீனர்களின் பாரம்பரியமான கையெழுத்துகலை, (chopstick challenge), மலாய்க்காரர்களின் கையெழுத்துகலை, கல் விளையாட்டு (பத்து சிரம்பான்), பூர்வகுடியினரின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கைவினை பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக தொடக்கப்பள்ளி மாணவர்களின் குழுப்பாடலும் இடம்பெற்றது. தாய்மொழியின் சிறப்பை வெளிக்கொணரும் வகையில் இந்த படைப்பு அமைந்தது என்று குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு பிற இனத்தின் பண்பாட்டையும் கலைகளையும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறலாம்.
21.2.2018இல் கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெறவுள்ள உலகத் தாய்மொழி நாள் நிகழ்வுக்கு இது முன்னோட்ட விழாவாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மலேசியத் தமிழ் அறவாரியம், மைஸ்கில்ஸ், நாம் தமிழர் இயக்கம், JAGAM, IKRAM, Merdeka University, மலேசியத் தமிழ்க்கல்வி ஒன்றியம், LLG ஆகியவையுடன் இன்னும் பல இயக்கங்கள் கலந்து சிறப்பித்தனர்.