19:22:56
Saturday
15 December 2018

உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பவர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்

உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பவர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்
கோலாலம்பூர், பிப்.13: உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் வருங்காலத்தைப் பற்றி சிந்திக்க மறந்து விடுகிறார்கள் என புத்ரா இன்டலெக் அனைத்துலக கல்லூரியின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் பரதன் மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.

உலகமயமாதலில் என்னென்ன மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை அறியாமல், தற்கால சூழ்நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் நாம் கண்டிப்பாக வருங்காலத் தடத்தில் பயணிப்பதிலிருந்து விடுபட்டு விடுவோம். ஏதோ ஒரு காலகட்டத்தில்தான் அந்த இடைவெளி குறித்து நாம் நினைத்துப் பார்ப்போம் என்றார் அவர். 
 

புத்ரா இன்டலெக் அனைத்துலக கல்லூரியில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் உயர்கல்வி பாடத் திட்டங்கள் யாவும் உலகமயமாதலுக்கு ஏற்ப அமையப் பெற்றிருக்கின்றன. எங்களது அனைத்துலக கல்லூரியில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் இதற்கு ஒரு காரணமாகக்கூட அமைகின்றது. 

"For over 2 decades, Putra Intelek International College has been at the forefront of higher education in Malaysia for both diploma and certificate programmes. The emphasis on a career-focused education, 21st century quality and internationalism helps nurture and mould every piic student into an adaptable graduate who is able to make a seamless transition into the working world. 

PIIC is committed to providing the best quality education backed by world-class facilities and resources for all its students, no matter what the choice of study."

ஆனால், நமது இந்தியர்களிடையே இந்த விவகாரம் தொடர்பான புரிதலே இல்லை என்று மிகவும் காட்டமாக கூறிய டாக்டர் பரதன், நாம் விழித்தெழ வேண்டிய சரியான காலகட்டம் இதுதான். இன்னும் காலம் தாழ்த்தினால், நாம் இந்த நாட்டில் இன்னும் பின்னுக்குத்தான் தள்ளப்படுவோம் என தமிழ் முரசுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் சொன்னார். 

நாம் யார், நமக்குள் இருக்கும் சக்தி என்ன, ஏன் நம்மால் உலகமயமாதலில் காலடி எடுத்து வைக்க முடியவில்லை என்பதை ஆராயாமலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். இது வருத்தத்தை அளிக்கக்கூடிய ஒரு விடயமாகும். 
உயர்கல்வி என்பது நமது வருங்காலத்தை நகர்த்துவதற்கான படிப்பாகும். இதனைப் புரிந்து கொள்ளாத மாணவர்களும் பெற்றோர்களும் ஏதோ ஒரு வற்புறுத்தலினால் கேள்விப்பட்ட படிப்பில் மாணவர்களை சேர்த்து விடுகிறார்கள். 

"Our focus is helping you decide and become who you want to be."

தங்களது பிள்ளை கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலோ உயர்கல்வி மேற்கொள்கிறார் என்பது கண்டிப்பாக பெற்றோருக்குப் பெருமையை வழங்கலாம். ஆனால், அந்தப் படிப்பு அவரின் வருங்காலத்தை வளமாக்குமா என்பதை ஆராய இந்திய பெற்றோர்கள் முன்வருவதில்லை. 

குறைந்த வருமானம் பெறும் (பி40) இந்திய சமுதாயத்தை அடையாளம் காட்டியுள்ளது நமது அரசாங்கம். அவர்களின் தரப்பில் அந்த பி40 பிரிவினருக்காக ஏதேதோ திட்டங்களை வகுத்து அமல்படுத்தி வருகிறார்கள். ஆனால், பிள்ளைகளின் வாழ்க்கைக்கு நாம்தாம் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

பணக்காரர்கள் அவர்களின் தலைமுறையை மட்டும்தான் பார்ப்பார்கள். அடுத்த நிலையில் உள்ளவர்களும் அப்படித்தான். ஆனால், குறைந்த வருமானம் பெறும் வர்க்கத்தினருக்கு அவரவரே உதவிக் கொள்ள வேண்டும். நாம் இன்னமும் உதவி கிடைக்குமா என்று எதிர்பார்க்கும் சமுதாயமாக இருக்கிறோம். ஆனால், ஆலோசனையை ஏற்றுக் கொண்டு உருமாற்றப் பாதையில் பயணிக்கும் மனநிலையில் இல்லை. இதனை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார். 


புத்ரா இன்டலெக் அனைத்துலக கல்லூரி 10,000 இந்திய மாணவர்களை இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்ற வேட்கையில் பயணிக்கிறது. இந்தப் பயணத்தில் உங்கள் பிள்ளையும் பங்கெடுக்க முடியும். அதற்கான உத்தரவாதத்தை நாங்கள் வழங்குகிறோம்.
இதனை சாத்தியமாக்கும் வழிமுறை எங்களிடம் இருக்கிறது. உடனே 011-1167 7765 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்புங்கள். 

உங்கள் பிள்ளையின் வாழ்வை வளமாக்க புத்ரா இன்டலெக் அனைத்துலக கல்லூரியில் ஒரு வாசற்கதவு திறந்திருக்கிறது. நம்பிக்கையுடன் வாருங்கள் எனவும் டாக்டர் பரதன் அழைப்பு விடுத்தார். 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.