12:45:30
Monday
20 August 2018

7 ஆண்டுகளாக தொடரும் சுபாங் ரோட்டரி கிளப்பின் சமூக சேவைகள்

7 ஆண்டுகளாக தொடரும்  சுபாங் ரோட்டரி கிளப்பின் சமூக சேவைகள்
கோலாலம்பூர், பிப்.9:

சுபாங் ரோட்டரி கிளப்பின் சமூக சேவைகள் கடந்த 7 ஆண்டுகளாக தேவையிலிருந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. வசதி குறைந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான பள்ளிச் சீருடை, புத்தகப் பை, எழுதுப் பொருட்கள், காலணி, புத்தகங்களை வழங்கும் இந்த கிளப், இம்முறை 500 மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக உதவ இலக்கு நிர்ணயித்துள்ளனர். 


'மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம்' எனும் திட்டத்தின் கீழ், 7 ஆண்டுகளைத் தாண்டியுள்ள இவர்களின் சேவை ஒவ்வோர் ஆண்டும் விருத்தி கண்டு வருகின்றது எனலாம். கட்டம் கட்டமாக உதவிப் பொருட்களை வழங்கி வரும் இவர்கள் ஜனவரி மாதத்தில் ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, செர்டாங் தமிழ்ப்பள்ளி, புக்கிட் ஜாலில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

சுபாங் ரோட்டரி கிளப்பின் இந்த மகத்தான சேவை குறித்து பேசிய ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பிபி சிவக்குமார், "இறைவன் நமக்கு இரு கைகளைக் கொடுத்துள்ளார். ஒன்று நம்மை முன்னேற்றிக் கொள்ள; இன்னொன்று மற்றவர்கள் முன்னேற கரம் கொடுக்க; இதனை அனைவருக்கும் உணர்த்தவே சேவை அடிப்படையிலான இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது" என்றார். 



மேலும், உதவி பெறும் மாணவர்கள், பிற்காலத்தில் முன்னேற்றம் கண்ட பிறகு, வசதி குறைந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் அவர் சொன்னார். 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.