Advertisement
Admin Login

23:21:40
Sunday
25 February 2018

மலாக்காவில் ஒரே மலேசியா ஆவிகள் உலவுகின்றன.

மலாக்காவில் ஒரே மலேசியா ஆவிகள் உலவுகின்றன.



இரா.சரவண தீர்த்தா 
மலாக்கா 

மலாய்காரர்,சீனர், இந்தியர், போர்த்துகீசியர் ஆகியோர்  ஒரே முகவரியைக் கொண்டிருப்பவர்களாக வாக்காளர் பட்டியல் 
காண்பிக்கிறது என்று ஆயர் குரோ சட்டமன்ற  உறுப்பினர் 
கூ போய் தியோங் கூறினார்.


ஜப்ருன்க  புக்கிட் பாரு தொகுதியில் இதுநாள் வரை வைக்கப்பட்டிருந்த கம்போங்  புக்கிட் கட்டில் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பட்டியலைக் கொண்ட பதிவேடுகளில் 19 ஏடுகள் காணாமல் போயிருப்பதும் பல சந்தேகங்களுக்கு இடமளித்திருப்பதால் தேர்தல் ஆணையத்தில் இப்பிரச்சினை குறித்து புகார் செய்ய வந்திருப்பதாக கூ கூறினார்.

தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்து காணாமல் போன பக்கங்களின் தகவல்களைத் தேடிப்பார்க்கும் போது ,சந்தேகப்பட்டமாதிரி பல குளறுபடிகள் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் நடந்திருப்பதைக் காண முடிவதாக அவர் கூறினார்.

கம்போங்ப பத்து அனாம் என்ற ஒரே முகவரியில் மலாய்காரர் ,சீனர்,இந்தியர்,போர்த்துகீசியர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும்,மாச்சாப் தொகுதியில் 134 வாக்காளர்கள் ஒரே முகவரியைக் கொண்டிருப்பதாக கூ ஆதாரங்களோடு விளக்கினார்.  

எதிர் வரும் பொதுத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்ட தேசிய  முன்னணியின் குறுக்கு புத்தி வியூகம் இது  என்று கூ சாடினார். இப்பிரச்சினையை தேர்தல் ஆணையம் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.





இதற்கிடையே,பண்டார் ஹிலீர் ,ஆயர் கெரோ, கோத்தா மலாக்கா . ஆகிய தொகுதியிலிருந்து 20 வாக்காளர்களின் பெயர்கள் புக்கிட் பாரு தொகுதிக்கு மாற்றம் செய்திருப்பதை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று   அமானா புக்கிட் கட்டில் தலைவர் சூபி அப்துல் வஹாப் தெரிவித்தார்.. அந்த 20 வாக்காளர்களும் ஆவி வாக்காளர்கள் அல்ல என்பதை தேர்தல் ஆணையம் சாட்சியங்களோடு உறுதி செய்ய வேண்டும் என்று அவர்  கேட்டுக் கொண்டார்.

மாற்றப்பட்ட இந்த 20 பேரும் ஆவி வாக்காளர்களாக இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக மலாக்கா மாநில ஹராப்பான் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு காரணம் இந்த 20 பேரும் ஒரே முகவரியைச் சேர்த்தவர் என்றும்,  இவர்களின் முகவரி முழுமையான விவரங்கள் அற்றவையாக இருப்பதாகவும் 
அவர் தெரிவித்தார்..

இதுபோன்ற ஆவி வாக்காளர்கள் உலவுவது முதல் முறையல்ல என்றும் கடந்த  வருடம் செப்டம்பர் மாதம், ஒரே முகவரியைக் கொண்ட  30 ஆவி வாக்காளர்கள் புக்கிட் கட்டில் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூட்டணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும்  ஆதாரங்கள் இல்லை என்று தேர்தல் ஆணையம் புகாரை நிராகரித்து விட்டது.



FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.