13:54:56
Friday
21 September 2018

விசுவாசம்: 4வது முறையாக தல அஜித்துடன் ஜோடி சேர்ந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா

விசுவாசம்: 4வது முறையாக தல அஜித்துடன் ஜோடி சேர்ந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா
விசுவாசம் படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வீரம், வேதாளம் மற்றும் விவேகம் படத்தைத் தொடர்ந்து தற்போது 4வது முறையாக சிவாவுடன் தல அஜித் விசுவாசம் படத்தின் இணைந்துள்ளார். வரும் 22ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கான தேர்வு விறுவிறுப்பாக நடந்து வந்தது. மேலும், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. செய்தியும் வெளியாகியது.

இந்த நிலையில், மாஸ் ஹீரோ அஜித்துக்கு மாஸ் ஹீரோயின் தான் இப்படத்திற்கு தேவை என்பதை உணர்ந்த படக்குழு, நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து பில்லா, ஏகன் மற்றும் ஆரம்பம் ஆகிய மூன்று மாஸ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேல் ஆண்டுக்கு ஒரு படத்தில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார் அஜீத். அடுத்ததாக அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.