12:45:39
Monday
20 August 2018

மலையில் இருக்கும் குட்டித் தலைவரை மறந்திடாதிங்கோ!

மலையில் இருக்கும் குட்டித் தலைவரை மறந்திடாதிங்கோ!
உலு சிலாங்கூரில் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம், சுங்கை சிப்புட்டில் டத்தோஶ்ரீ சரவணன், தாப்பாவில் டத்தோஶ்ரீ எஸ்.கே. தேவமணி என்று அண்மையில் வந்த அவதாரப் பட்டியலில் முக்கியமான குட்டித் தலைவர் ஒருவரின் பெயர் இடம்பெறாமல் போனது வியப்பாக உள்ளது என அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகின்றன.

"புதுசா வந்த பட்டியல் பொய்யோ மெய்யோ, மலையில் நடுங்கிக் கொண்டிருக்கும் நம்ம குட்டித் தலைவரின் பெயரையே காணோமே? என்னய்யா இது... என்ன நடக்குது? பெருந்தலைவர்கள் மூவரும் ஏதோ சொல்ல வருகிறார்கள்" என இந்தியர்களின் தலையாய கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ் முரசு பக்கமாக வந்த காதோற செய்தி குறிப்பிடுகிறது. 

மோகனாவுக்கு டத்தோ ஷிப், மோகனனுக்கு  டத்தோ, செனட்டர், சரவணனுக்கு டத்தோஶ்ரீ... இது இப்படியிருக்க நம்ம தலைவருக்கும் அதே டத்தோ ஷிப் கொடுத்தாங்க. அடுத்ததாக காதுல பூ வைச்சிருவாய்ங்க போல இருக்கு. இப்படி ஒன்னு நடந்துச்சுனா, நம்ம சுகாதார அமைச்சர சும்மா விடக்கூடாது" என இந்தக் குட்டித் தலைவரின் 'துணுக்குகள்' 'மாமாக்' கடைகளில் பேசிக் கொள்கிறார்களாம்.

நம்ம தலைவருக்கு மலையில போட்டியிட எல்லா தகுதியும் இருக்கு. ஏற்கெனவே நம்ம ஜெயிச்ச எடம். இப்போ யாரோ உள்ளே குதிச்சு வேல செஞ்சா விட்டுருவோமா? நோ சான்ஸ் ப்ரோ... விடக்கூடாது. கண்டிப்பா டத்தோவுக்குத் தான் நஜிப் வாய்ப்பு கொடுப்பார் என அவரின் ஃபோலோவர்ஸ் பேசுவதும் நமக்கு எட்டியது.

எது எப்படியோ... முக்கியமான தலைவர்கள் வெற்றி பெறக்கூடிய வகையில் காய் நகர்த்த முயற்சி செய்து வருகின்றனர். எல்லாம் சரிதான். ஆனால், மலையில் இருக்கும் நம்ம குட்டித் தலைவருக்கும் அங்கேயே போட்டியிட கிரீன் சிக்னல் கிடைச்சா சிறப்பா இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இவர்கள் சிந்திப்பது நியாயம் தானே!


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.