03:32:00
Sunday
27 May 2018

பிரீமியர் லீக்: தோல்வியில் இருந்து தப்பித்த டோட்டேன்ஹம்

பிரீமியர் லீக்: தோல்வியில் இருந்து தப்பித்த டோட்டேன்ஹம்
லிவர்புல், பிப்.5: 

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் கடைசி நிமிடத்தில் போடப்பட்ட பினால்டி கோலால், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் அணி தோல்வியில் இருந்து தப்பியது.ஞாயிற்றுக்கிழமை அன்பீல்ட் அரங்கில் நடந்த ஆட்டத்தில் லிவர்புல் 2- 2 என்ற கோல்களில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பருடன் சமநிலை கண்டது. 

அன்பீல்ட் அரங்கில் லிவர்புலுக்கு எதிரான 25 ஆட்டங்களில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் ஒரு  முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மற்றொரு தோல்வியை சந்திக்கும் விளிம்பில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் இருந்தது. 



எனினும், ஹாரி கேனின் பினால்டி கோல், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் நிலையை மாற்றியமைத்தது. முன்னதாக லிவர்புல் அணியின் முதல் கோலை முஹமட் சாலா, 3 ஆவது நிமிடத்தில் போட்டார். முதல் பாதி ஆட்டம் 1- 0 என்ற நிலையில் லிவர்புலுக்கு சாதகமாக முடிந்தது. 

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில்  விக்டர் வான்யாமா போட்ட கோலின் மூலம் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் ஆட்டத்தை சமப்படுத்தியது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மீண்டும் சாலா போட்ட கோலினால் லிவர்புல் 2 - 1 என்ற கோல்களில் முன்னிலை பெற்றது. 

இருப்பினும் ஹாரி கேன் அடித்த பினால்டி கோல், லிவர்புலின் வெற்றிக் கனவை சிதைத்தது. லிவர்புல் 51 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 49 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.