தனபாலனின் கார் திரும்பக் கிடைத்தது
By Admin | Published on : Feb 02, 2018 02:55 am

கோலாலம்பூர், பிப்.2:
தேசிய கால்பந்து விளையாட்டாளர் தனபாலனின் காணாமல் போன புரோட்டோன் ஈஸ்வரா காரை சிலாங்கூர் போலீசார் கண்டுபிடித்து விட்டதாக அதன் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் ஃபட்ஸில் அகமட் தெரிவித்தார்.
பொதுமக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாலை 3.00 மணியளவில் அந்தக் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கோம்பாக் மாவட்ட தலைமை அலுவலகம் விசாரணை செய்து வருகின்றது என்றார் அவர்.
தைப்பூசக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள தனபாலன் சிரம்பானில் இருந்து தமது குடும்பத்தோடு அந்தக் காரில்தான் அவர் பத்துமலைக்கு வந்திருந்தார். பத்துமலையின் அருகில் நிறுத்தி வைத்திருந்த அவரின் கார் காணாமல் போனதைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்தார்.
பின்னர், தமது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இதுகுறித்து அவர் பதிவேற்றம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.