Advertisement
Admin Login

23:25:30
Sunday
25 February 2018

மலேசிய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் விண்ணப்பத்தை நிராகரித்த செலாயாங் நகராண்மைக் கழகத்திற்கு மைபிப

மலேசிய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் விண்ணப்பத்தை நிராகரித்த  செலாயாங் நகராண்மைக் கழகத்திற்கு மைபிப
[audio ogg="http://tamilmurasu.com.my/wp-content/uploads/2018/01/WhatsApp-Audio-2018-01-27-at-19.01.13.ogg"][/audio]

கோலாலம்பூர், ஜன. 27: தைப்பூசத்தை முன்னிட்டு பத்துகேவ்ஸ் 'மயில்கேட்' எதிர்புறம் சிறு வியாபாரத்தை நடத்தி வந்த மலேசிய மாற்றுத் திறனாளிகள் சங்க உறுப்பினர்களின் விண்ணப்பத்தை நிராகரித்து எங்கோ ஓர் மூலையில் கடைகளை வழங்கியிருக்கும் செலாயாங் நகராண்மைக் கழகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது என மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவு தெரிவித்தது.

ஒவ்வோர் ஆண்டும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பம் செய்யும்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதன் பின்னர்தான் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இம்முறை அவர்களின் விண்ணப்பம் முழுமையாக நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு வேறு இடத்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளான இவர்களுக்கு செலாயாங் நகராண்மைக் கழகம் முறையான உதவிகளை செய்வதிலிருந்து தவறியிருப்பது வருத்தத்தை ஏற்படுத்துவதாக மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன் கூறினார்.

மலேசிய மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் பிரான்சிஸ் சிவா 6.09 நிமிடங்களைக் கொண்ட குரல்பதிவை வாட்ஸ்அப் சமூக வளைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததைத் தொடர்ந்து இவ்விவகாரம் தற்போது வைரலாகியுள்ளது.

அந்தப் பதிவில் அவர் தமது உறுப்பினர்கள் சார்பாகத் தமது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, வரும் திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.

வரும் 29ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளாக நாங்கள், அங்கு கடைகளை அமைக்கப் போகிறோம். இதனால், பல பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, எங்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் திரள வேண்டும் என்றும் பிரான்சிஸ் சிவா அப்பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.