05:42:10
Monday
18 June 2018

பொதுத் தேர்தலுக்கு எதிரான பிரச்சாரங்கள்: எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் தந்திரம்

பொதுத் தேர்தலுக்கு எதிரான பிரச்சாரங்கள்: எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் தந்திரம்
கோலாலம்பூர், ஜன. 27: சமூக வலைத்தளங்களின் வைரலாகிவரும் 'Don’t Vote in the GE14', '#UndiRosak' ஆகிய பிரச்சாரங்கள், எதிர்க்கட்சி தலைமைத்துவத்தின் நம்பிக்கை கொள்ளாத எதிர்க்கட்சி வாக்காளர்களின் தந்திரமான செயல் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கூறினார்.
தேசிய முன்னணியின் வாக்காளர்களோ இதுபோன்ற பிரச்சாரங்களில் ஈடுபடாமல் தேமுவின் வெற்றியை உறுதி செய்வதற்காக தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் வாக்களிக்கச் செல்வர்.
"வாக்களிக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் தேமுவின் ஆதரவாளர்கள் அல்லர். ஏனெனில் தேமுவின் ஆதரவாளர்கள் தேசிய முன்னணிதான் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வாக்களிக்க வருவர்" என்று இங்கு நடைபெற்ற பொருளாதார சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
அம்னோதான் மேற்குறிப்பிட்ட பிரச்சாரங்களைத் தொடங்கியிருப்பதாக பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் அண்மையில் நடைபெற்ற ஊடகப் பிரிவுடனான கூட்டத்தின்போது கூறினார்.
இக்கூற்றுக்குப் பதிலளித்த டத்தோஶ்ரீ அப்துல் ரஹ்மான், புத்தாக்கத் துறையை நோக்கி அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. இது முக்கியமான துறையாக விளங்குவதோடு பல சவால்களையும் உட்படுத்தியிருக்கிறது. இத்தகைய முக்கியமான விவகாரங்களில் மட்டும்தான் அரசு கவனம் செலுத்துகிறது என்றார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.