18:24:08
Tuesday
19 February 2019

பரமேஸ்வரா நாளடைவில் முழுமையாகக் கொல்லப்படுவாரா?

பரமேஸ்வரா நாளடைவில் முழுமையாகக் கொல்லப்படுவாரா?
நம் நாட்டின் வரலாறு புத்தகங்கள் குறித்து பொது மக்களிடம் ஐயப்பாடு எழுந்த வண்ணம் உள்ளன. சமூக வலைத்தளங்களில்,புலனங்களில் இப்பிரச்சினை குறித்து வெளிப்படையாகப் பேசப்பட்டு வருகிறது.குறிப்பாக பள்ளி மாணவர்களின் வரலாறு பாடப்புத்தகங்களில் பரமேஸ்வரா ஓர் இந்து எனும் தகவல் பாடப்புத்தகத்திலிருந்து எடுக்கmட்டுவிட்டது என்று சொல்லப்பட்டு வருகிறது. கடாரம், ராஜ ராஜ சோழன் குறித்த தகவல்கள், இந்து அரசாங்கதின் ஆட்சி அமைப்பு போன்ற தகவல்கள் 10 வருடங்களுக்கு முன் உள்ள வரலாறு புத்தகங்களில் தெளிவாக,விரிவாக இடம் பெற்றிருந்தது போல் தற்போது இல்லை என்று வரலாறு பாட ஆசிரியர்கள் குறைபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

[caption id="attachment_5150" align="aligncenter" width="291"] தொ.க.நாராயணசாமி[/caption]

"நமது நாட்டின் முந்தைய வரலாற்றில் மலாக்கா வரலாறையும் பரமேஸ்வராவையும் பிரிக்க முடியாத ஒன்றாக கற்று வந்த பல தலைமுறைகளுக்கு தங்களுடைய பிள்ளைகளுக்குப் பரமேஸ்வரா யாரென்று தெரியாத வண்ணம் வரலாற்று உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது"என்று நாராயணசாமி போன்ற கல்விமான்கள் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர். நடப்பு அரசியலின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தற்போதைய கல்வி கொள்கைகள் இதுபோன்ற சூழ்ச்சிகளைக் கையாண்டு வருவதாக மலாக்கா ஸ்டாம்போர்ட் கல்லூரியின் முதல்வர் நாராயணசாமி நிருபரிடம் கூறினார்.

"மலேசிய வரலாற்றில் இந்தியர்களின் ஆளுமைகளின் தடங்கள் நமது தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வரலாறு தொடர்பான புத்தகங்கள் படைக்க வேண்டும். இப்புத்தகங்கள் தமிழ் மொழியில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் மொழிப்பெயர்க்க வேண்டும். இந்த செயல்களில் ஈடுபடும் எழுத்தாளர்களுக்கு இந்திய சமூகமும் தலைவர்களும் நுஸு ஆதரவைத் தர வேண்டும். காரணம் நமது அடையாளம் என்பது அடையாள கார்டு அல்ல அது வரலாற்றின் வேர்கள் என்றார் கல்விமானும் எழுத்தாளருமான நாராயணசாமி".

[caption id="attachment_5152" align="aligncenter" width="253"] எ.மதியழகன்[/caption]

"வரலாறு உண்மைகள் மறைக்கப்படும்போதெல்லாம் அதனை இனம்கண்டு மக்களிடம் எடுத்துக்கூறி பிறகு புத்தகத்தை அல்லது தகவல்களை மீட்டுக் கொள்கிறோம் என்று பாடபுத்தகக் குழு அல்லது கல்வி அமைச்சு விடும் அறிக்கைகைகள் ஏற்றுக் கொள்ளக் குடியதாகவா இருக்கிறது" என்று மலாக்கா இளைஞர் திலகம் எ .மதியழகன் நிருபரிடம் கேள்வி எழுப்பினார்.

[caption id="attachment_5167" align="aligncenter" width="235"] இணை பேராசிரியர் டாக்டர் சிவச்சந்திரலிங்கம் சுந்தர ராஜா,(மலேசிய வரலாற்றுச் சங்கம், ஆலோசனை வாரியம், 2018 முதல் 2019 வரை, (தேசியம்) )[/caption]

"பல்கலைக்கழகங்களில் அறிவியல் பிரிவில் அமர்ந்திருக்கும் இந்திய பேராசிரியர்கள் இது போன்ற பிரச்சினைகளை கண்டு ஒதுங்கிக் கொண்டு மௌனம் சாதிப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஒரு புத்தகம் தயாரிக்குமுன் அதில் இருக்கும் தகவல்கள் கூடவோ குறைவாகவோ இருந்தால் அதனை எடுத்துச் சொல்லும் திராணி இல்லாதவர்களாக கற்ற அதிகாரிகள் இருப்பதாகத் தெரிகிறது" என்றார் மதியழகன்.


முகநூலில் தன்னுடைய பெயரைக் களங்கப்படுத்தி விட்டார்கள் என்று விறுவிறுப்பாக இயங்கி பல்லூடக ஆணையத்திடம் புகார் கொடுக்கச் சென்ற அமைச்சர் கமலநாதனின்  ஆர்ப்பாட்டத்தை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் பாடப் புத்தகத்தில் ஏற்பட்டிருக்கும் வரலாறு தகவல்கள் இருட்டடிப்பு குறித்து கல்வி துணை அமைச்சரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.கருத்தும் வரவில்லை" என்று மதி சாடினார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் வரலாறு இலாகாவில் பொறுப்பு வகித்து வரும் இணை பேராசிரியர் டாக்டர் சிவச்சந்திரலிங்கம் சுந்தர ராஜா  அவரிடம்  மின்னஞ்சல் வழியாக நிருபர் தொடர்பு கொண்டார். படிவம் இரண்டு சரித்திரப் பாடப் புத்தகம் குறித்து அவரிடம் கேள்வி கேட்ட போது ,"அந்த புத்தகத்தை நான் பார்க்கவில்லை, ஆரம்பப்பள்ளிக்கும் , படிவம் 1-க்கும் உள்ள சரித்திரப் பாடப்புத்தகக் குழுவில் உறுப்பினராக இருப்பதாகவும் படிவம் இரண்டு புத்தகத்துக்கு வேறொருவர் பொறுப்பு ஆகும்" என்று கூறி பதிலை முடித்துக்கொண்டார். இது ஒரு பொறுப்புள்ள கல்விமான் நடந்து கொள்ளும் பண்பா என்று கேள்வி எழுகிறது. நேற்று வந்த மின்னஞ்சலில், "வரலாறு பாடப்புத்தகங்களில் பரமேஸ்வரா பெயரை எடுக்கவில்லை அவர் ஓர் இந்து என்பதைத்தான் குறிப்பிடாமல் விடப்பட்டிருக்கும்"என்று சிவசந்திரலிங்கம் தெரிவித்தார்.

[caption id="attachment_5155" align="aligncenter" width="328"] நா.நாகேஸ்வர ராவ்[/caption]

"இதுநாள் வரை சரித்திரத்தில் பரமேஸ்வரா ஓர் இந்து என்று சரித்திர புத்தகத்தில் இடம் பெறச் செய்வது அறிவு சார்ந்த குற்றமா? புதிதாக எதையும் நாங்கள் சேர்க்கச் சொல்லவில்லை. இதற்குமுன் சொல்லபி பட்டு வந்த உண்மையை ஏன் மறைக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.கல்விக் கழகங்களில் உள்ளவர்கள் சரித்திரப் பிழைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்கக் கூடாது. வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும் மாணவர்களுக்கு அதனையே பாடமாக நடத்துவது ஆசிரியப் பண்புக்கு எதிரான செயலாகும்" என்றார் அசகான் ம.இ.கா கிளையின் செயலாளர் நாகேஸ்வர ராவ்.

 

[caption id="attachment_5159" align="aligncenter" width="221"] ஆசிரியர் சைமன்[/caption]

"வரலாற்றுத் தகவல்கள் குழித் தோண்டி புதைக்கும் அரசியல் நரித்தந்திரங்கள்  சின்னப்பிள்ளைகளிடம் பலிக்காது . காரணம் இணைய உலகம் திறந்த அறிவை நமக்குக் கொடுத்துள்ளது. பரமேஸ்வரா மலேசியப் பாடப் புத்தகத்திலிருந்து மறையலாம். ஆனால் உலகச் சரித்திரத்திலிருந்து அவரைக் கொன்று விட முடியாது என்று முன்னாள் பள்ளி முதல்வர் சைமன் தெரிவித்தார்.

 

[caption id="attachment_5157" align="aligncenter" width="300"] ராஜத்தினம் ஆறுமுகம்[/caption]

மலாய் சமூகத்திற்குச் சாதகமாக எழுதும் சரித்திர புத்தகத்தைப் புறக்கணியுங்கள் என்று புதிய தலைமுறை கட்சியின் தோற்றுநரும் தலைவருமான ராஜத்தினம் ஆறுமுகம் நிருபரிடம் கூறினார். மத்திய அரசை மாற்றினால் இதுபோன்ற சிந்தனைகளை மாற்றி அமைக்க முடியும். தன்னுடைய ஆளுமைகளை முன்னிறுத்தும் நோக்கத்தில் வரலாற்று உண்மைகளை மறைப்பது ஓர் அரசியல் விளையாட்டு என்று தாம் கருதுவதாக மலேசிய இந்திய இளைஞர்  மன்றத்தின் தோற்றுநரும் முன்னாள் தேசியத் தலைவருமான ராஜரத்தினம் தெரிவித்தார்.

 

https://youtu.be/tGE68-NpC_g

 

 

https://youtu.be/Zp6E5d3MZXI

 

இரா.சரவண தீர்த்தா


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.