20:21:43
Saturday
15 December 2018

'இலவச கழிப்பறை வசதி' திட்டத்திலும் கட்டணம் வசூலிப்பதா?

'இலவச கழிப்பறை வசதி' திட்டத்திலும் கட்டணம் வசூலிப்பதா?
கோலாலம்பூர், ஜன. 27: இலவசமாக பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் 'இலவச கழிப்பறை வசதி' திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி குண்டர் கும்பல் லுழு ஒன்று பத்துமலையில் கடந்த ஆண்டு கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

நாங்கள் பக்தர்களுக்கு உதவி செய்யவே இலவச கழிப்பறை திட்டத்தைக் கொண்டு வந்தோம். ஆனால், கடந்த ஆண்டு, பத்துமலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 'இலவச கழிப்பறையை ஆக்கிரமித்து கட்டணம் வசூலித்தது வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என மைபிபிபி இளைஞர் பிரிவின் தலைவர் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

இவ்வாண்டும் மூன்றாவது முறையாக இலவச கழிப்பறை வசதி திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். கடந்த ஆண்டைப் போல் இவ்வாண்டும் பக்தர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று அவர் அறிவுரை கூறினார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.