05:48:24
Monday
18 June 2018

தேசிய கொடியை ஏற்றினார் கவர்னர் பன்வாரிலால்

தேசிய கொடியை ஏற்றினார் கவர்னர் பன்வாரிலால்
சென்னை: நாட்டின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் துரைமுருகன், அக்கட்சியின் எம்எல்ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக போர் நினைவிடத்தில் கவர்னர் மற்றும் முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். முன்னதாக சென்னை போர் நினைவிடத்தில் கவர்னர் பன்வாரிலால் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து காந்தியடிகள் காவலர் விருதுகள், அண்ணா விருதுகள், வேளாண் துறை சிறப்பு விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடியை ஏற்றினர்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.