Advertisement
Admin Login

23:24:32
Sunday
25 February 2018

இந்தியர்களுக்கு அதிக நன்மையளிக்கும் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கை !

இந்தியர்களுக்கு அதிக நன்மையளிக்கும் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கை !
கோலாலம்பூர், ஜன. 26: வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி முன்வைக்கும் தேர்தல் கொள்கை அறிக்கை இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் உட்பட பெல்டா குடியேற்றக்காரர்களுக்கும் பெரும் நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் ராயிஸ் ஹுசேன் கூறினார்.

அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் சீனப்புத்தாண்டிற்கு முன்னதாக நம்பிக்கைக் கூட்டணி தனது தேர்தல் கொள்கை அறிக்கையை முன்வைக்கும் என்றும் அவர் சொன்னார்.

தேர்தல் கொள்கை அறிக்கை தயாராகி விட்டது. எனினும், அது முன்னதாக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் மன்றத்திடம் சமர்பிக்கப்பட வேண்டும். அக்கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என்றார்.

தலைவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அந்த தேர்தல் கொள்கை குறித்து விவாதிக்கும் வண்ணம் அக்கூட்டணியிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும் என்றார்.

5 அடிப்படை கூறுகள், அரசாங்கம் ஆட்சியை அமைத்து 100 நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 வாக்குறுதிகள், 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய 50 வாக்குறுதிகள் ஆகியவையும் அதில் உள்ளடங்கும் என்றும் அவர் சொன்னார்.


இதில் இந்நாட்டிலுள்ள இந்தியர்களும், ·பெல்டா குடியேற்றக்கார்களும் பயனடையும் வகையில் சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்படும் என்றார். 



FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.