Advertisement

17:41:38
Saturday
21 April 2018

மாறிவிட்டார்கள் முதலாளிகள்: சொக்சோ அகப்பக்க பயனீட்டாளர்களாகப் பதிந்துக் கொள்ள இணக்கம்

மாறிவிட்டார்கள் முதலாளிகள்: சொக்சோ அகப்பக்க பயனீட்டாளர்களாகப் பதிந்துக் கொள்ள இணக்கம்
கோலாலம்பூர், ஜனவரி 25 : இம்மாதம் 23 ஆம் தேதி வரையில் நாடளாவிய நிலையில் மொத்தம் 162 ஆயிரம் முதலாளிகள் சொக்சோ அகப்பக்க பயனீட்டாளர்களாக பதிந்துக் கொண்டுள்ளனர். இம்மாத இறுதிக்குள் மேலும் அதிகமான முதலாளிகள் சொக்சோ அகப்பக்க பயனீட்டாளர்களாக பதிவு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடக்கம் வேலைக் காப்புறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு இழந்தவர்களுக்கான சந்தா தொகை பகிர்ந்தளிக்கப்படவிருக்கும் நிலையில் இறுதி நேரம் வரையில் காத்திருக்காமல் முதலாளிகள் முன்கூட்டியே ASSIST PERKESO வில் பதிந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

www.perkeso.gov.my எனும் சொக்சோ அகப்பக்கத்திலும்  1 300 22 8000 எனும் வாடிக்கையாளர் அழைப்புச் சேவை மூலமாகவும் அது தொடர்பான விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதலாளிமார்களுக்கு இணையம் வாயிலாக சேவைகளை வழங்கும் ASSIST அகப்பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரையில் அதிகமானோர் சொக்சோ முகப்பு சேவைகளை முற்றுகையிட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், சேவையளிப்பில் சிரமத்தை எதிர்நோக்குவதாக சொக்சோ வருத்தம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்களை சொக்சோ சந்தாதாரர்களாக பதியவும் அவர்களுக்கான சந்தா தொகையைச் செலுத்தவும் இணைய வசதிகளைப் பயன்படுத்தும்படி முதலாளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.