05:51:10
Monday
18 June 2018

தைப்பூசத்தன்று பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்

தைப்பூசத்தன்று பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்
[caption id="attachment_5059" align="alignleft" width="212"] எஸ் மகேந்திரன்[/caption]

கோலாலம்பூர், ஜனவரி 25 :  விரைவில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நான்குப் பாதைகளில் மூன்று நாட்களுக்கு 24 மணி நேர கே.டி.எம். ரயில் சேவையும் கிள்ளான் துறைமுகம் –  பத்துமலை, சிரம்பான் – பத்துமலை, பத்துமலை- சிரம்பான், செந்துல் – பத்துமலை பாதிகளில் கூடுதல் சேவைகளும்  வழங்கப்படும். அதோடு, பத்துமலைக்கு பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் சென்று திரும்புவதற்கு இச்சேவைகள் வசதியாக இருக்கும் என கே.டி.எம்.  நிறுவனத்தின் நடவடிக்கை பிரிவின்  தலைமை நிர்வாகி எஸ் மகேந்திரன் கூறினார்.

 

கொமுட்டர் சேவையின் வழக்கமான பயண நேரத்திற்கு பிறகு  இரவு மணி 10.50 தொடங்கி, காலை மணி 5.30 வரைக்கும்  ரயில் சேவை ஏற்படுத்தப்படும். மேலும், இவ்வாண்டு பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி பத்துமலைக்கு சென்றுவர இலவச பேருந்து சேவை உட்பட ஒருசில கூடுதல் சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாரவர்.


தைப்பூசத்திற்காக  மூன்று நாட்களுக்கு, கூடுதலாக  783  ரயில் சேவைகள் ஏற்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட நாட்களில் அதிகமான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிட  400 பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.


இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு, ஜோர்ஜ் டவுனின் சுற்றுப் பகுதியில் சில சாலைகள் கட்டங் கட்டமாக மூடப்படவுள்ளன. வெள்ளி மற்றும் தங்க ரதங்களின் ஊர்வலத்தை முன்னிட்டு தைப்பூச தினத்தின் முதல் நாளில் அச்சாலைகள் மூடப்படுமென பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஏ. தெய்வீகன் தெரிவித்தார்.




[caption id="attachment_5060" align="alignnone" width="300"] பினாங்கு ரத ஊர்வலத்தின்போது[/caption]

தங்க, வெள்ளி இரதங்கள் வலம் வரும் பகுதிகளிலுள்ள, LEBUH QUEEN, JALAN DATUK KERAMAT, JALAN AIR TERJUN, LEBUH VICTORIA உட்பட மேலும் குறிப்பிட்ட சில சாலைகள் போக்குவரத்துக்காக மூடப்படவுள்ளன. 30-ஆம் தேதி,   இரு இரதங்கள்  புறப்படும்  போது,  மாலை ஐந்து மணி தொடங்கி சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படுமென தெய்வீகன் தெரிவித்தார்.


அதேபோல, தங்க – வெள்ளி இரதங்கள், பிப்ரவரி முதலாம் தேதி மீண்டும் திரும்பும் போது, JALAN TUN ABDUL RAHMAN, JALAN ANSON, JALAN BURMA உட்பட மேலும் சில சாலைகள் மூடப்படவுள்ளன. மாலை நான்கு மணி தொடங்கி அந்த  சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்றாரவர்.



சம்பந்தப்பட்ட நாட்களில் இந்த  சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் போலீசாரின் விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். எவ்வித தடையுமின்றி,   இரு இரதங்களும் பக்தர்கள் புடை சூழ வலம் வந்து கோயிலை அடையும் வரை போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என அவர் சொன்னார்.




FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.