நாடி ராக்யாட் இயக்கத்தின் மக்கள் பொங்கல் விழா
By Admin | Published on : Jan 24, 2018 06:56 am

கோலாலம்பூர், ஜன. 24: இந்திய சமுதாயத்தினர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கண்டு வரும் 'நாடி ராக்யாட்' இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
வரும் 28ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வங்சா மாஜூ ஷாசெக் பிஸ்தாரி மண்டபத்தில் இவ்விழா நடைபெறவுள்ளது. 50 பானைகளில் பொது மக்களுடன் பொங்கல் வைத்தல், கலை நிகழ்ச்சி, விருந்துபசரிப்புகளுடன் விழா நடைபெறவுள்ளது.
300 பேருக்கான சிறப்பு பரிசுகள், குலுக்கல் முறையில் பரிசுகள் உள்ளிட்ட இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும் விழாவில் இடம்பெறும்.
[caption id="attachment_5027" align="aligncenter" width="205"]
டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் [/caption]
இவ்விழாவிற்கு கூட்டரசுப் பிரதேசத்தின் அமைச்சர் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், வங்சா மாஜூ தொகுதி அம்னோ தலைவர் டத்தோ டாக்டர் ஷாபி அப்துல்லா ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக விழாவில் கலந்து கொள்கின்றனர்.
மக்களுக்காக நடத்தப்படும் இந்த ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு சுற்று வட்டாரத்தில் உள்ள அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழு தலைவரும் நாடி ராக்யாட் இயக்கத்தின் தலைவருமான அழகன் கேட்டுக் கொண்டார்.