05:38:57
Monday
18 June 2018

சுங்கை பட்டாணி நகராண்மை மன்ற உறுப்பினராக மைபிபிபி சுபராயம் நடேசன் பதவி ஏற்றார்

சுங்கை பட்டாணி நகராண்மை மன்ற உறுப்பினராக மைபிபிபி  சுபராயம் நடேசன் பதவி ஏற்றார்
சுங்கை பட்டாணி, ஜன.24:
சுங்கை பட்டாணி நகராண்மை மன்ற உறுப்பினராக மைபிபிபி கெடா மாநில செயலாளரும் மைபிபிபி மெர்போக் தொகுதித் தலைவருமான திரு.சுபராயம் நடேசன் பதவி ஏற்றார்.

இப்பதவியின் வாயிலாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களைய தாம் முழு வீச்சில் செயல்படவிருப்பதாக அவர் தெரிவித்தார். தமது சேவைக்கு உட்படுத்திய இடம் அறிவிக்கப்பட்டதும், அப்பகுதி மக்களுக்கு செயல்திறன்மிக்க சேவையை வழங்கப் போவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மைபிபிபி தலைவர்களை முன்னோடியாகக் கொண்டு செயல்பட்ட தமக்கு இப்பதவி வழங்கப்பட்டிருப்பது மிகப் பெரிய அங்கீகாரமாகும் என்றார் அவர். அதோடு, கட்சி உறுப்பினர்களின் வளர்ச்சியில் அதீத அக்கறை காட்டும் மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ், முதன்மை உதவித் தலைவர் டத்தோஶ்ரீ மெக்லின், உதவித் தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் ஆகியோருக்கு நன்றிக் கடம் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

"மக்கள் சேவையே மகேசன் சேவை என்றிருக்கும் மைபிபிபி கட்சியின் உறுப்பினராக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். வாழ்நாள் முழுக்க இக்கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன்" என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.