16:25:28
Tuesday
23 October 2018

தைப்பூச பந்தலுக்கான விலையை இ-இடமான் உயர்த்தாது! டத்தோ ஜோஹாரியின் முயற்சிக்கு வெற்றி

தைப்பூச பந்தலுக்கான விலையை இ-இடமான் உயர்த்தாது! டத்தோ ஜோஹாரியின் முயற்சிக்கு வெற்றி
சுங்கைபட்டாணி ஜன.24- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தைப்பூசத்தில் அமைக்கும் பந்தல்களுக்கு இ-இடமான் விலையை உயர்த்திருந்தது.

இந்த  விலை உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால், நேற்று சுங்கைபட்டாணி இ-இடமான் உயர் அதிகாரி முகமட் சைபூல் அனுவாரை சுங்கைபட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹாரி பின் அப்துல் சந்தித்ததுப் பேசினார். கடந்த ஆண்டைப்போல இவ்வருடமும் பந்தல் விலையை நிலைநிறுத்தும்படி பரிந்துரைத்து பேசி அதிகாரியின் சம்மதத்தைப் பெற்றார்.

டத்தோ ஜோஹாரியின் முயற்சியால், தைப்பூச பந்தல் அமைப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆக்ககர முயற்சியை முன்னெடுத்த அவருக்கும் இணக்கம் தெரிவித்த இ-இடமான் அதிகாரிக்கும் அவர்கள் நன்றி சமர்ப்பித்தனர்.

முன்னதாக, 3 கடைகளுக்கு வெள்ளி 50 வசூலித்து வந்த இ-இடமான் இந்த ஆண்டு கடை ஒன்றுக்கு வெள்ளி 30 உயர்த்தியதால் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.