12:48:48
Monday
20 August 2018

விழுவதெல்லாம் எழுவதற்கே

விழுவதெல்லாம் எழுவதற்கே
[caption id="attachment_5004" align="aligncenter" width="224"] மு.சுப்பையா[/caption]

ஜாசின் கவிஞர் மு.சுப்பையாவின் விழுவதெல்லாம் எழுவதற்கே கவிதை தொகுப்பு புத்தக வெளியீட்டில் ஆசிரியர் சமூகம் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



செர்காம் ,ஜாசின் லாலாங் தமிழ்ப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த சுப்பையாவின் நூலைப் பெற்று கொள்ள அவர் காலத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களும், அவரிடம் மாணவனாக இருந்தவர்களும், சுப்பையாவின் குணத்துக்கு மரியாதை கொண்டவர்களும் சபையில் ஒன்று திரண்டனர்.

 

இல்லை,முடியாது,தெரியாது என்ற மூன்று சொற்களைக் கடுமையாக வெறுக்கும் மனிதரான தமிழாசிரியர் சுப்பையாவின் இக்கவிதை நூல் வெளியீடு செவ்வாய்க்கிழமை( இன்று), மாலை 4 மணிக்கு, குபு தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

[caption id="attachment_4971" align="aligncenter" width="300"] கவிஞர் ஜாசின் ஏ.தேவராஜன்[/caption]

112 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கிட்டத் தட்ட 100 கவிதைகள் இளையோர்களின் ஒழுக்கப் பிறழ்வைக் கருப்பொருளாகக் கொண்டு,சமூகத்தில் ஒழுக்கம் மேவிடவேண்டி நிற்கிறது என்று நூலுக்கு வாழ்த்துரைத்தந்த நூலாசிரியரின் முன்னாள் மாணவனும், கவிஞருமான ஜாசின் தேவராஜன் தெரிவித்தார்.

[caption id="attachment_4990" align="aligncenter" width="278"] டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்[/caption]

இந்நூலில் புனையப்பட்டிருக்கும் கவிதைகள் யாவும் காலத்திற்கு ஏற்ப புனையப்பட்டவை என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நூலின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

[caption id="attachment_4991" align="aligncenter" width="368"] அன்பு சங்கரன் ( நடுவில்), ஆனந்தகுமார் ( இடது) நூலாசிரியர் சுப்பையா (வலது)[/caption]

கவிஞரின் கவிதை வரிகள் யாவும், அறிவுநிலையில் நின்று பேசும் வரிகளாகவும், வாசிக்கும் வாசகனின் உணர்வு நிலையை நையப்புடைந்து அவனுக்குள் உட்புகும் எ ஃ கால் தீட்டப்பட்ட வாள் என்றார் நூலாய்வு செய்த தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் அன்பு சங்கரன்.

[caption id="attachment_4987" align="aligncenter" width="300"] மா.கு. மாணிக்கத்தின் புதல்வர் திருநாவுக்கரசு ஆசிரியரிடமிருந்து நினைவுக்கையெழுத்து பெறுகிறார்[/caption]

அலோர் காஜா தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.மா.கு.மாணிக்கம் தமக்குத் தமிழறிவை ஊட்டி ஆசிரியராகப் பரிணமிக்கச் செய்தவர் என்று தமது உரையில் பகன்ற கவிஞர் சுப்பையா, மறக்க முடியாதவர்கள் பட்டியலில் இதே தமிழ்ப் பள்ளியில் பணிப்புரிந்த ஆசிரியர் ந.ஆறுமுகத்தையும் சேர்த்துக் கொண்டார். அவரின் பட்டியலில் அடுத்தவராக ஜாசின் தேவராஜன் பெயரையும் குறிப்பிட்டார். கவிதைகளை எழுவதில் மட்டுமே கவனம் செலுத்திய தம்மிடம் அதனை நூலாக வடிவமைக்கச் சொல்லி ஊக்கம் கொடுத்தவர் ஜாசின் தேவராஜன் என்று சுப்பையா, நூலில் பதித்திருக்கும் தமது உரையில் தெரிவித்துள்ளார்.

 

[caption id="attachment_4996" align="aligncenter" width="403"] ஆசிரியரிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொள்ளும் குபு தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி மல்லிகா[/caption]

  இந்நூலின் மூலம் பெறப்பட்ட ரொக்கத்தை குபு தமிழ்ப் பள்ளிக்குக் கொடையாக வழங்குவதாக சுப்பையா அறிவித்தார்.

 

பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்ட ஆசிரியரான சுப்பையா தமது குடும்பத்திலும் கல்வி முக்கியத்துவத்தை ஊட்டி ஆசிரியர்களையும், மருத்துவர்களையும் உருவாக்கி உள்ளார்.

 

 

 

 

 

 

 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.