06:17:39
Thursday
15 November 2018

இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் 2022 காமன்வெல்த் போட்டி

இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் 2022 காமன்வெல்த் போட்டி
காமன்வெல்த் போட்டி 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.டர்பன் நகர் போட்டியை நடத்த முடியாது எனக் கூறியுள்ளதால் பர்மிங்காம் நகருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு இடையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டுத் தொடர் காமன்வெல்த் போட்டி 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிலும்,2018ஆம் ஆண்டிற்கான போட்டி அவுஸ்ரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரிலும் நடந்துள்ளது.

இந்தநிலையில் 2022ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் நிதி பிரச்சினையால் மிகப்பெரிய இந்த தொடரை எங்களால் நடத்த இயலாது என தென்ஆப்பிரிக்கா கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிதாக விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் இங்கிலாந்தின் பர்மிங்காம் மற்றும் லிவர்பூல் நகரம் விருப்பம் தெரிவித்திருந்தது. இரு நகரமும் ஒரே நாட்டைச் சார்ந்ததால் பர்மிங்காம் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிற்கு 750 மில்லியன் பவுண்டு செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.