06:15:53
Thursday
15 November 2018

அனைத்துலக போலிங் போட்டியில் மலேசியாவிற்கு இரண்டாவது வெள்ளி

அனைத்துலக போலிங் போட்டியில் மலேசியாவிற்கு இரண்டாவது வெள்ளி
கடந்த சனிக்கிழமை(மலேசியாவில் ஞாயிறு) லாஸ் வேகஸ்,அமெரிக்காவில் நடந்த 2017 அனைத்துலக போலிங் போட்டியில் மலேசியாவிற்கான இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார் மலேசிய போலிங் வீராங்கனை சித்தி சாபியா அமிரா அப்துல் ரஹ்மான்.

2017-ஆம் ஆண்டின் உலகக் கிண்ண வெள்ளிப்பதக்க வெற்றியாளரான அவர்,தனியார்,இரட்டையர்,மூவர் மற்றும் ஐவர் குழுவின் பிரிவில் மொத்தம் 5,048 போலிங் பிங்கலை அடித்து சாதனை புரிந்திருக்கிறார் என்பது போட்டியின் வளையத்தளத்தின் மூலமாக தெரியவந்தது.

அமெரிக்காவின் போட்டியாளரான டேனியல் மெக்ஈவன் 5,126 பின்களுடன் தங்கப்பதக்கத்தைப் பெற்ற வேளையில்,தாய்வானின் சாய் சின் யி 5,017 பின்களுடன் சவுத் பாயிண்ட் போலிங் ப்ளஸாவில் நடந்த வருடாந்திர போட்டியில்,இவ்வருடம் வெண்கலப் பதக்கத்தை வாகை சூடியுள்ளார்.

ஆறு விளையாட்டுகளில் 6,227 பின்களுடன் அரை இறுதி சுற்றுக்கு மலேசியாவைப் பிரதிநித்து சென்ற சித்தி சபியா,எஸ்தர் சியா,சின் லி ஜேன்,சைடாத்துள் அபிபா பட்ரூல் ஹமிடி மற்றும் ஷாலின் சுல்கிப்ளி தகுதியாகினர்.

6,325 பின்களுடன் தகுதி சுற்றில் முதலிடத்திலிருக்கும் சிங்கப்பூரைத் தொடர்ந்து 6,167 பின்களுடன் மூன்றாவது இடத்தில் கொலம்பியாவும் 6,140 பின்களுடன் நாங்காவது இடத்தில் வட கொரியாவும் தகுதியானது.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.