Advertisement
Admin Login

23:33:44
Sunday
25 February 2018

பேட்மிண்டன் சூப்பர்சீரிஸ் இறுதிக்கு ஸ்ரீகாந்த் கிதாம்பி, பிவி சிந்து தகுதி

பேட்மிண்டன் சூப்பர்சீரிஸ் இறுதிக்கு ஸ்ரீகாந்த் கிதாம்பி, பிவி சிந்து தகுதி
துபாயில் நடைபெற இருக்கும் பேட்மிண்டன் சூப்பர்சீ்ரிஸ் இறுதி தொடருக்கு இந்தியாவின் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.



உலக பேட்மிண்டன் போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இடையில் துபாயில் ‘பேட்மிண்டன் சூப்பர்சீரிஸ் இறுதி தொடர் நடைபெற இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி. இவர் இந்த வருடம் மட்டும் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் சூப்பர்சீரிஸ் ஓபனை கைப்பற்றியுள்ளார். இதனால் சூப்பர்சீரிஸ் இறுதித் தொடரில் 2-வது இடம் கிடைத்துள்ளது.

அதேபோல் பெண்கள் பிரிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் பிவி சிந்து. இவர் இந்தியா மற்றும் தென்கொரியா ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

மேலும், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கிளாஸ்கோ உலக சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனால் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த இருவரையும் தவிர இந்தியா சார்பில் யாரும் சூப்பர்சீரிஸ் பைனலில் இடம்பிடிக்கவில்லை.

இந்த தொடர் டிசம்பர் 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது.

Source: Maalaimalar


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.