23:53:24
Friday
20 July 2018

மூத்த தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்

மூத்த தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்
தமிழறிஞர் மா.நன்னன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். உயிரிழந்த மூத்த தமிழறிஞர் நன்னனுக்கு வயது 94. இவர் விருத்தாலசத்தை அடுத்த சாத்துகுடல் என்ற ஊரில் 1923-ல் பிறந்தார். திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவராக இருந்தார் தமிழறிஞர் மா.நன்னன். 1948 முதல் 1950 வரை ஆல் இந்தியா ரோடியோவில் நன்னன் பணியாற்றினார். 1980-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சிகளில் நன்னனது தமிழ் வகுப்புகள் பிரசித்தி பெற்றவையாக இருந்தது. நன்னன் தமிழ் வளர்ச்சி துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.


இலக்கணம், கல்வியியல், உரை நடையியலில் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். மாநில கல்லூரியில் தமிழ் பேராசிரியராக நன்னன் பணியாற்றியுள்ளார். தமிழ்ச் செம்மல் விருது, பெரியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை நன்னன் பெற்றுள்ளார். 17 ஆண்டுகளாக எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் தமிழ் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். செம்மொழி மற்றும் உலகத் தமிழ்மொழி மாநாடுகளில் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தவர். ஊடகத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு குறித்த பல்வேறு ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.



FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.