19:29:19
Tuesday
19 February 2019

'நவராத்திரியின் மறைந்த ரகசியம்' நூல் வெளியீட்டு விழா

'நவராத்திரியின் மறைந்த ரகசியம்'  நூல் வெளியீட்டு விழா
“போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா, 
போற்றி தாய் என்று பொற்குழல் ஊதடா!” 
ஆஹா.... மகாகவி பாரதியாரின் கவிதை இது. 

தாய்மார்களையும் பெண்களையும் போற்றும் கவியில் எத்துணை சுவை. ஆம், பாரதி மகான் பெண் எழுச்சிக்காகப் போராடிய ஒரு மாபெரும் மனிதராவார். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பெண் இனத்தைக் காமப் பொருளாக மட்டும் பார்ப்பதின்றி மதித்து போற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாகியதுதான் இந்து சமயத்தின் சக்தி வழிபாடு. அதில் முக்கியமாகப் பெண்களை ஆதிபராசக்தியின் அம்சமாகப் பாலித்து வணங்கி உயர்தர மரியாதையைத் தருவது சக்தி வழிபாட்டின் சுஹாசினி பூஜை ஆகும். 

தங்காக் ஜொகூரில் அமைந்துள்ள மலேசிய முதல் சக்தி பீடமான ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் 22/09/2018 சனிக்கிழமையன்று ஸ்ரீ சுஹாசினி பூஜை நடந்தேறியது. 1990-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட  இந்த ஆஸ்ரமத்தில் வருடாவருடம் 48 நாட்கள் நவராத்திரி விழாவுடன் இந்த சுஹாசினி பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது. லலிதா சஹஸ்ரனாமத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் கணவனுடன் என்றும் மகிழ்ச்சியாகவும் சுபிட்சமாகவும் வாழும் சுமங்களி பெண்களைப் பூஜிப்பது அந்த பராசக்தியைப் பூஜிப்பதற்கு சமம் என்பதைத் திண்ணமாக நம்பி வருடா வருடம் சக்தி ஆஸ்ரமம் இப்பூஜையை நிகழ்த்தி வருகின்றது. 

இப்பூஜைக்காக 9 தாய்மார்கள் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சக்தி ஆஸ்ரமத்தின் ஸ்தாபகராகிய குருஜி சக்தி பிரியானந்தரால் மந்திர உபதேசம் வழங்கப்பட்டது. பூஜை நாளன்று யாகம் நிகழ்த்தப்பட்டு அந்த 9 தாய்மார்களும் ஒவ்வொரு தேவியராக அலங்கரிக்கப்பட்டனர். பிறகு, அம்பாளுக்கு செய்யப்படும் அனைத்துப் பூஜை முறைகளும் நெய்வேத்தியமும் வழங்கப்பட்டு கோடான கோடி பக்தர்களின் வருகையில் சிறப்பாக நடந்தேறியது. 

மறுநாள், ஞாயிற்றுக்கிழமை 23/09/2018 அன்று குருஜி சக்திபிரியானந்தரால் கைப்பட எழுதப்பட்ட 'நவராத்திரியின் மறைந்த ரகசியம்' எனும் நூலின் வெளியீட்டு விழா சக்தி ஆஸ்ரமத்தில் நடந்தேறியது. 

சக்தி உபாசகர், தீவிர அம்பாள் பக்தர், இளைஞர்கள் மாற்றுருவாக்க விவேக இளைஞன் என அனைத்துப் பெருமைக்குரிய இவர்  தற்போது உலகளாவிய நிறுவனத்தில் ஒரு சட்டம் / மனிதவள இயங்குனராகப் பணி புரிந்து வருகிறார். 

முதல் நூலான 'சக்தி புத்தகம்', இரண்டாவதாக 'சுயநலம் புத்தகம்' என எழுதிய இவர் அம்பாளின் புகழும் வழிபாடும் நாடுதளுவிய அளவில் பரவ அவளின் உகர்ந்த விழாவான நவராத்திரியை ஒட்டி இந்நூலை எழுதி வெளியிட்டார். 

நவராத்திரியின் வகைகள், சக்தி பக்தர்கள் மேட்கொள்ள வேண்டிய உபாசனங்கள், பாரம்பரிய மற்றும் வைதீக பூஜைகள், போன்ற முழுக்க முழுக்க நவராத்திரியை ஒட்டியே தாங்கி  இந்நூல் மலர்ந்துள்ளது. 

இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகையாளராக மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் ஷான் அவர்கள் வருகைப் புரிந்து நூல் வெளியீட்டு விழாவைத் துவக்கி வைத்தார்.  

இந்நூலின் கருவின் மீது கொண்ட  ஆர்வமும் விளக்கமும்   அதை வாங்கி பயில வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டியது என்று கூறினார். 

நிகழ்ச்சியை மெருகூட்டும் வகையில் விஹாரா நடனக் குழுவின்  படைப்பு அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. இரவு உணவுக்குப்பின் மக்கள் அனைவரும் பேரின்பத்துடன் வீடு திரும்பினர்.FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.