20:38:04
Saturday
15 December 2018

மலேசியாவின் அபரிமித வளர்சிக்காக ஜனநாயகச் சக்தி ஒருங்கிணையட்டும்!

மலேசியாவின் அபரிமித வளர்சிக்காக ஜனநாயகச் சக்தி ஒருங்கிணையட்டும்!
மலேசியாவின் அபரிமித வளர்ச்சிப் பாதையை தங்கு தடையின்றி நேர் செய்வதற்காக, மலேசியர்கள் அனைவரும் வேற்றுமைகளை அகற்றி ஒற்றுமை எனும் மந்திர கோலுக்கு உயிர் கொடுக்க வேண்டியது மட்டுமே முதற்கண் அவசியம் என்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

“சுதந்திரத்திற்குப் பின், மிகக் குறுகிய காலத்திலேயே அசத்தலான வளர்ச்சியைப் பதிவு செய்து, உலக நாடுகளை பிரமிக்க வைத்த வரலாற்றை நாம் கொண்டிருக்கிறோம்.  சமூகப் பொருளாதார ரீதியிலும் தொழிலியல் புரட்சியிலும் மலேசியாவின் அடைவுநிலை உச்சத்தை எட்டியிருக்கிறது.  பல்லின மக்களின் நற்குடியை தரமிக்கதாக உயர்த்துவதிலும் நம் நாடு தரம் தாழ்ந்துவிடவில்லை. இந்த முன்னேற்றமானது, வண்ணமய மலேசியர்களின் ஒற்றுமையால் சாத்தியமானது!
“அரசியல் கலாச்சாரங்களின் தாக்கத்தால் மலேசியர்களிடையே மாற்று கருத்துகள் நிலவினாலும், தேசிய வளர்ச்சி எனும் வரும் போது அனைவரும் ஒரு குடையின் கீழ் நாட்டுக்காகப் பாடுபடுகிறார்கள்; ஒரே மலேசியர்கள் எனும் அணியில் நிற்கிறார்கள். இத்தகைய நாட்டுப் பற்று, மேன் மேலும் தொடர வேண்டும்; நாட்டின் மீதான விசுவாசம் வலிமைப் பெற வேண்டும்” என மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

“புதிய திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் நம் நாடு, தொடர்ந்து பல அபரிமித வளர்ச்சிகளைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு, ஜனநாயகச் சக்தியானது ஒரே நேர்க்கோட்டில் ஆளுமைச் செய்ய வேண்டும்.  விருப்பு வெறுப்புகளைக் கடந்து, தேச பக்தியோடு பயணித்தால் மட்டுமே, மலேசியர்களிடையிலான நல்லிணக்கம் வலுவடையும்; வாழ்வாதாரம் செழிக்கும்! இந்த பண்பு  நலன்களை நினைவில் நிறுத்தி ஒன்றுமையோடு பயணிப்போம்… அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்” என்று தமது வாழ்த்துச் செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.