18:56:40
Saturday
15 December 2018

ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் 48 நாட்கள் 30ஆவது நவராத்திரி உபாவாசம்

ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் 48 நாட்கள் 30ஆவது நவராத்திரி உபாவாசம்
ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் 48 நாட்கள் 30ஆவது நவராத்திரி உபாவாசம் மிக​ கோலாகலமாக​த் தொடங்கவுள்ளது. கடந்த 1990இல் தொடங்கப்பட்ட​ இந்த​ நவராத்திரி விழா இவ்வாண்டோடு 30ஆவது ஆண்டு வருட​ கொண்டாட்டமாக​ பீடுநடை போடவுள்ளது. இக்கொண்டாட்டம் நாளை செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

நவராத்திரி எனும் சொல் இரு வார்த்தைகளின் ஒருங்கிணைப்பாகும். நவ​ என்றால் ஒன்பது மற்றும் ராத்திரி என்றால் இரவு என​ பொருள்படும். ஆக​, இவ்விழா ஒன்பது இரவுகளைக் கொண்டுள்ளது. ஒன்பது புனித​ இரவுகளான​ நவராத்திரி வருடத்திற்கு 5 முறை கொண்டாடப்படுகின்றது. இவை சந்திர மாதத்திற்கேற்ப​ பெயரிடப்பட்டுள்ளன​. அதாவது, வசந்த​ நவராத்திரி, குப்த​ நவராத்திரி, ஷரத​ நவராத்திரி, பௌஷ்ய​ நவராத்திரி மற்றும் மஹா நவராத்திரி ஆகும்.

மலேசியாவின் முதல் சக்தி பீடமான​ ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில், ஜகன் நாயகி காமாட்சியின் அருளைப் பெற​ 48 நாட்கள் சக்தி உபவாசத்தோடு கொண்டாடப்படுகிறது. இதன் சிறப்பே  5 நவராத்திரிகளின் சிறப்பு நாட்களை இணைத்து ஷரதா நவராத்திரியில் நிகழ்த்தப்படுவதாகும். சாக்த​ சமயத்தில் உபாசனம் என்ற​ சொல் அம்பாளிடம் நம்மை நெருக்கமாக்கும் அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. பொதுவாகவே, இதன் வழிபாடும் தியானமும் நம்மை பிரபஞ்சத்தோடு இணைக்கும் வகையிலும் மாபெரும் சக்தியான​ அம்பாளை அடையவும் வழிவகுக்கும்.

எனவே, மலேசிய மக்கள் அனைவரையும் நவராத்திரி காலங்களில் ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்திற்கு வருகை புரியுமாறு  அன்போடு அழைகின்றோம். நவராத்திரி விழா ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக​, இங்கு நடைபெறும் பூஜையானது வைதீக​ முறையில் நடத்தப்படுகின்றது. மேலும், யாகங்கள், தியானம் மற்றும் ஜபம் இந்த​ நவராத்திரி விழாவில் பக்தர்கள் மேற்கொள்ளும் சாதனாக்களாகும். இந்த​ நவராத்திரி விழாவின் தொடக்கமாக​ 108 குட​ ஜல​ அபிஷேகம் நடைபெறும். பாரம்பரிய​ பூஜைகளில் ஒன்றான​ இப்பூஜையின்போது, பக்தர்கள் ஆற்றங்கரையிலிருந்து ஊற்றுநீரை ஏந்தி ஆஸ்ரமத்திற்கு ஊர்வலம் வந்து அம்பாளுக்கு அவர்களது கரங்களால் அபிஷேகம் செய்வர்.



மேலும், அம்பாளுக்கு மிகச் சிறந்த​ சக்திவாய்ந்த​ யாகங்களான​ தசமஹா வித்யா யாகம், சண்டி யாகம் மற்றும் ப்ரித்தியங்கிரா யாகம் போன்றவை ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் நடைபெரும். இந்த​ யாகங்கள் சக்தி ஆஸ்ரமத்தில் எங்கும் காணாத​ 18 அடி கீழ் குடிகொண்டிருக்கும் 10 தசமஹா வித்யா தேவிகளுக்கு நடைபெறும் யாகமாகும். இந்த​ யாகங்கள் அனைத்தும் பிள்ளி, சூனியம், ஏவல் மற்றும் கண்ணாறு போன்ற​ தீய​ சக்திகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.

அதோடு, பாரம்பரியமாக​ நமது முன்னோர்கள் வழி வந்த​ கனிவிளக்கு, மாவிளக்கு மற்றும் அக்னி சட்டி போன்ற​ பூஜைகளும் 48 நாட்கள் நவராத்திரி காலங்களில் நடத்தப்படும். குறிப்பாக​, ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் அக்னி சட்டி பூஜை மிகவும் விமரிசையாக​ நடைபெறும். லேடாங் மலையடிவாரத்திலிருந்து அக்னி சட்டியை ஏந்தி ஆஸ்ரமத்தை உலாவந்து அம்பாளுக்கு பக்தர்கள்  சமர்ப்பணம் செய்வர். மலேசியா மட்டுமல்லாமல், சிங்கப்பூரிலிருந்தும் பக்தர்கள் பலர் இப்பூஜையில் கலந்து கொள்வதற்காகவே ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்திற்கு வருகைப் புரிவர்.


அம்பாளுக்காகவே மிகவும் சிறப்பாக​ சக்தி ஆஸ்ரமத்தில் கொண்டாடப்படும் இந்த​ நவராத்திரி விழாவில் ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்குப் பல​ விதமான​ அபிஷேகம் மற்றும் அலங்காரத்தோடு பூஜைகள் செய்யப்படும். குறிப்பாக​, பூமாலை சமர்ப்பணம் பூஜை. இப்பூஜையை இந்தியாவில் புஷ்பாபிஷேகம் என​ அழைப்பர். பூ மாலை சமர்ப்பணத்தின்போது அம்பாளுக்கு பூக்களால் மட்டுமே அலங்காரம் செய்யப்படும். இப்பூஜையின்போது, மூலஸ்தானம் மட்டுமின்றி, ஸ்ரீ சக்தி ஆஸ்ரம் முழுதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். அழகுக்கு அழகு சேர்ப்பது எனும் உவமைத் தொடருக்கேற்ப​ இந்த​ பூஜை அமையும் என்பதில் ஐயமில்லை.

இந்த​ 48 நாட்கள் நவராத்திரியின்போது நிகழ்த்தப்படும் முக்கியமான​ பூஜைகளில் ஒன்றுதான் நவரத்ன​ பாமாலை. இப்பூஜையின்போது நவரத்ன​ பாமாலை 12 மணி நேரத்திற்கு இடைவிடாமல் பக்தர்களால் பாடப்படுவது மட்டுமல்லாமல் குருஜி அவர்களால் 6 கால​ யாகம் மற்றும் அம்பாளுக்கு 6 கால​ அபிஷேகம் நடைபெறும். நோய் நொடி, பிள்ளி, சூனியங்களால் அவதிப்படுபவர்களுக்கு நிவர்த்தி பூஜையாக​ அமைகிறது. இப்பூஜையானது, கடந்த​ 30 ஆண்டுகளாக​த் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் பூஜையாகும்.

இந்த​ 48 நாட்கள் நவராத்திரியின் இறுதி நாளான​ விஜயதசமியன்று ப்ரம்ம​ முகூர்த்தத்தில் பக்தர்கள் அனைவருக்கும் சக்ர​ தியானம் குருஜி சக்தி பிரியானந்தா அவர்களால் உபதேசம் செய்து பயிற்சி செய்யப்படும். இச்சக்ரா தியானத்திற்குப் பிறகு, பக்தர்கள் அனைவரும் ஆற்றங்கரைக்குப் புறப்பட்டு பாரம்பரிய​ பூஜைகளில் ஒன்றுதான் கரகம் பாலித்தல் நடைபெறும். பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்பாளுக்கு பூஜை அபிஷேகம் செய்ததைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். 

அந்நாள் இரவில், சக்தி ஆஸ்ரமத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பாளை மஹிஷாசுர​ மர்த்தினி போல் அலங்காரம் செய்து 30 அடியில் உருவாக்கப்பட்ட​ அசூரனை சமாரம் செய்யும் சம்பவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அம்பாளை சாந்தம் செய்யும் வகையில் பெரிய​ அளவில் கோலாட்டம், தாண்டியா, கர்பா, விளக்கு நடனம், மயிலாட்டம் போன்ற​ படைப்புகள் படைக்கப்படும். அம்பாளைத் தாளாட்டுவது மட்டுமின்றி பக்தர்கள் அனைவரும் கும்மியடித்து தங்களின் ஆனந்தத்தை வெளிப்படுத்துவார்கள்.

அன்னை ஸ்ரீ காமாட்சி மற்றும் குருஜி சக்தி பிரியானந்தா அவர்களின் ஆசீர்வாதம் பெற​ ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்திற்கு வருகைத் தாருங்கள். மேல் விவரங்களுக்கு, 0129779476 (குரு கன்னாஜி),0173065079 (சக்தி சேகர்) மற்றும் 0173025330 (சக்தி அகிலன்) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.