19:28:17
Tuesday
19 February 2019

ஆசிய இளையோர் பனிசறுக்குப் போட்டியில் தங்கங்களைக் குவிக்கிறார் ஶ்ரீ அபிராமி!

ஆசிய இளையோர் பனிசறுக்குப் போட்டியில் தங்கங்களைக் குவிக்கிறார் ஶ்ரீ அபிராமி!
பேங்கோக்,ஆகஸ்ட்.6- ஆசிய இளையோர் பனிசறுக்கும் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து பங்கேற்றுள்ள 6 வயது சிறிமி ஶ்ரீ அபிராபி சந்திரன் நேற்று மட்டும் இரு தங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இன்று பிற்பகல்  1.15 மணிக்கு மற்றொரு பிரிவில் பங்கேற்ற ஶ்ரீ அபிராமி தாயகத்திற்கு மூன்றாவது தங்கத்தையும் வெற்றிக் கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் ஒரே வீராங்கனை ஶ்ரீ அபிராமி ஆவார். தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, மக்காவ், வியட்நாம், குவைத், ஜப்பான் போன்ற நாடுகளும் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், இவ்விரு தங்கப் பதக்கங்களையும் நேற்று 62-வது திருமண நாளைக் கொண்டாடிய பிரதமர் துன் மகாதீர்- சித்தி ஹஸ்மா தம்பதியருக்கு சமர்ப்பிப்பதாக சிறுமி ஶ்ரீ அபிராமியின் தந்தையார் சந்திரன் தமது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.