18:24:03
Tuesday
19 February 2019

ஜமால் யூனுசிற்கு ஜாமின் இல்லை

ஜமால் யூனுசிற்கு ஜாமின் இல்லை
கோலாலம்பூர் ஜூலை 31:
இரண்டு சூதாட்ட மையங்களில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியிருக்கும் அம்னோ சுங்கை பெசார் தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனோஸ் மீதான ஜாமின் உத்தரவை இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மீட்டுக் கொண்டது.

ஜமால் யூனுசுக்கு எதிராக ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் விதிக்கப்பட்ட தலா 3,000 வெள்ளி ஜாமினை மீட்டுக் கொள்ளக் கோரி துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நூராஷிமா ஹாஷிம் மற்றும் ராய்ஹானா அப்துல் ரசாக் செய்த விண்ணப்பத்தை மாஜிஸ்திரேட் முகமது ஃபிர்டாவுஸ் சாடினா அலி மற்றும் ஹஸ்லிண்டா ஏ.ராவுப் அங்கீகரித்தனர்.

ஜமால் யூனோஸ் மீண்டும் தலைமறைவாகிவிடுவார் என்ற அச்சத்தினால் அவருக்கு ஜாமின் அளிப்பதை மீட்டுக் கொள்ளும்படி அரசு தரப்பு நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்தது.

இதனைத் தொடர்ந்து அவ்விரு அத்துமீறல் சம்பவங்களில் ஜமாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. அதே வேளையில், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவத்தில் மறுக்கப்பட்ட ஜாமின் நிலைநிறுத்தப்பட்டது.

இவ்வழக்கு முடியும் வரை ஜமால் சுங்கை பூலோ சிறையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.