14:58:57
Tuesday
23 October 2018

லதா ரஜினிகாந்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

லதா ரஜினிகாந்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை, ஜூலை 4: 'கோச்சடையான்' படத்திற்கான விநியோக பிரச்சினையில் லதா ரஜினிகாந்த் இன்னமும் பணம் தராததால் உச்சநீதி மன்றம் லதா ரஜினிகாந்தை எச்சரித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தின் வெளியீட்டிற்கு 'ஆட்-பீரோ' நிறுவனம் லதா ரஜினிகாந்தின் நிறுவனமான 'ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட்' நிறுவனத்திற்கு கடன் கொடுத்திருந்தது.

இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், அதற்காக திரைப்பட உரிமையையும் வழங்குவதாகவும் கூறியிருந்தார். ஆனால் படவெளியீட்டு உரிமையையும் தராமல் ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வேறொரு நிறுவனத்திற்கு படவெளியீட்டை கொடுத்தது.

இதனால் பாதிக்கப்பட்ட ஆட் பீரோ நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தது. கடன் வாங்கிய பணத்தில் 8.70 கோடி திருப்பி தந்ததாகவும் மீதி பணம் தரவில்லை என்று கர்நாடக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. போதிய ஆதாரங்கள் இல்லை என அப்போது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன் பின் உச்சநீதிமன்றத்தில் இதற்கான வழக்கு, ஆட் பீரோ நிறுவனத்தாரால் தொடங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீரியன் ஜோசப் மற்றும் பானுமதி ஆகிய இருவரும், தரவேண்டிய பாக்கி பணமான 6.20 கோடியை எப்போது தருவீர்கள்? என்று கேட்டிருந்தனர். ஏற்கனவே தருவதாக சொல்லியும் இன்னும் தராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக சரியான விளக்கம் தராவிட்டால் முதல் குற்ற அறிக்கை விசாரணையை தொடர வேண்டிவரும் என்று நீதிபதிகள் இருவரும் லதா ரஜினிகாந்த் வழக்கறிஞர்களிடம் கடுமையாக எச்சரித்தனர். இதனை அடுத்து வழக்கு ஜூலை 10ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.