16:03:47
Tuesday
23 October 2018

அட்டகத்திக்கு பிறகு ரஞ்சித்துடன் இணையாதது ஏன்? மனம்திறந்த நந்திதா

அட்டகத்திக்கு பிறகு ரஞ்சித்துடன் இணையாதது ஏன்? மனம்திறந்த நந்திதா
அட்டகத்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நந்திதா, தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் மட்டுமே நடிக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து...

ஐஸ்வர்யா ராஜேஷுடனான நட்பு எப்படி தொடர்கிறது?

அட்டகத்தி படத்தில் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தோம். அந்த நட்பு அப்படியே நீடிக்கிறது. அவரது வளர்ச்சி ஒரு தோழியாக எனக்குப் பெருமையாக இருக்கிறது. நாங்கள் இருவருமே எவ்வளவு கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தோம். கதாநாயகி ஆனோம் என்பது இருவருக்குமே தெரியும். எனவே எங்களிடம் எந்தப் பொறாமையும் கிடையாது.

தொடர்ந்து அம்மா வேடங்களில் நடித்தால் இமேஜ் பாதிக்காதா?

இமேஜ் பற்றிய கவலையோ, பயமோ எனக்கு இல்லை. அசுரவதம் படத்தின் கதையே முதலில் ஐஸ்வர்யாவுக்கு தான் சென்றது. அவர் என்னிடம் படத்தைப் பற்றியோ, கதை பற்றியோ எதுவும் கூறாமல் நீ அம்மாவாக நடிப்பாயா? என்று மட்டும் கேட்டார். நடிக்க தயார் என்றதும் கதை கேட்க சொன்னார். நான் எந்த வேடத்திலும் நடிக்கத் தயார். அடுத்து டாணா என்ற படத்தில் கவர்ச்சியான மாடர்ன் கதாபாத்திரத்தில் ஐடி பெண்ணாக நடிக்கிறேன். வணங்காமுடியில் போலீஸ் வேடம். கதையில் நமது கதாபாத்திரம் முக்கியமானதா, இல்லையா என்பதைத் தான் பார்க்கிறேன்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.