16:28:34
Tuesday
23 October 2018

ரொனால்டோவை 100 மில்லியன் யூரோவீற்கு விற்க தயாராகிறது ரியல் மாட்ரிட்

ரொனால்டோவை 100 மில்லியன் யூரோவீற்கு விற்க தயாராகிறது ரியல் மாட்ரிட்
கால்பந்து போட்டியில் சிறந்த வீரராக திகழ்ந்து வருபவர் போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2003 முதல் 2009 வரை மன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். அதன்பின் 2009-ல் இருந்து தற்போது வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் தொடரைக் கைப்பற்றியது.

ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ இதுவரை 292 போட்டிகளில் விளையாடி 311 கோல்கள் அடித்துள்ளார். தற்போது அவருக்கு 33 வயதாகிறது. ரியல் மாட்ரிட் அணியுடனான ரொனால்டோவின் ஒப்பந்தம் 2021 வரை இருக்கிறது.

இருந்தாலும் மெஸ்சியின் சம்பளத்தை விட தன்னுடைய சம்பளம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால் சம்பளத்தை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று ரியல் மாட்ரிட் அணியிடம் வலியுறுத்தி வந்தார். வருடத்திற்கு 65 மில்லியன் பவுண்டு சம்பளம் தரவேண்டும் என்று கேட்டார். ஆனால், ரியல் மாட்ரிட் 30 மில்லியன் பவுண்டு மட்டுமே வழங்க முடியும் என்று கூறியது. இதை ரொனால்டோ மறுத்துவிட்டார்.

இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்குச் செல்லலாம் என்ற செய்தி வெளியாகிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் இத்தாலி கிளப்பான யுவான்டஸ் கிறிஸ்டியானோ ரொனால்டோவை வாங்க இருப்பதாகவும், ரொனால்டோவுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, 100 மில்லியன் யூரோவிற்கு யுவான்டஸ் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தத் தொகைக்கு ரியல் மாட்ரிட் சம்மதம் தெரிவிக்க தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ரொனால்டோ இந்த சீசனில் யுவான்டஸ் அணிக்காக விளையாடலாம் என்றும் கூறப்படுகிறது. 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.