18:35:05
Tuesday
19 February 2019

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’
உலகளவில் அனைத்து மக்களும் ரசிக்கும்  நடிகரான  சிவகார்த்திக்கேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. ப்ரொடக்ஷன்ஸ் மூலமாக தயாராகும் திரைப்படம் கனா.

கனா திரைப்படம் கிராமத்தில் இருந்து கிரிக்கெட் வீராங்கனை ஆகும் கனவோடு நகரத்துக்கு வரும் ஒரு பெண்ணின் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இத்திரைப்படத்தின் இயக்குநர், நடிகர், பாடலாசிரியரான அருண்ராஜா காமராஜ்.  இதில் ஐஸ்வர்யா, சத்தியராஜ், தர்ஷன் முதலியோர் நடிக்கின்றனர்.  இத்திரைப்படம் அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் இவ்வருடம் வெளிவரவுள்ளது.

மலேசியாவிலுள்ள சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் இப்படத்திற்காக வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இவ்வுலகில் வாழும் இந்திய இளைஞர்களுக்கு ஓர் உந்துசக்தியாகத் திகழும் சிவகார்த்திகேயனின் படங்கள் மலேசியாவிலும் பெருமளவில்  வரவேற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.