15:25:20
Tuesday
23 October 2018

இரு தலைமை நீதிபதிகள் பதவி விலகல்

இரு தலைமை நீதிபதிகள் பதவி விலகல்
புத்ராஜெயா, ஜூன் 13 - தலைமை நீதிபதி துன் முகமட் ராவுஸ் ஷாரிப்பும், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி டான்ஸ்ரீ சுல்கிப்லி அகமட் மகினுடினும் வரும் ஜூலை 31ஆம் தேதியன்று பதவி விலகவுள்ளனர்.

அவர்களின் பதவி விலகல் கடிதம் மாமன்னருக்கு கடந்த வெள்ளிக்கிழமையே அனுப்பப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர்களின் பதவி விலகலுக்கு மாமன்னர்  ஒப்புதல் வழங்கியதாக இஸ்தானா நெகாரா நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.

அதோடு, ராவுசும் சுல்கிப்லியும் தங்களது பதவி விலகல் முடிவு குறித்து கடந்த மே 15ஆம் தேதி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்தித்துப் பேசியதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராவுசும் சுல்கிப்லியும் தங்களின் பணிகளை முடித்துக்கொடுக்க சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகையால், அவர்களின் பதவி விலகல் ஜூலை 31-ஆம் தேதி அமலுக்கு வரும். 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.