23:26:45
Monday
21 January 2019

அமைச்சரவை பட்டியல் ஊடகத்தின் கணிப்பு: சேவியர் விளக்கம்

அமைச்சரவை பட்டியல் ஊடகத்தின் கணிப்பு: சேவியர் விளக்கம்
கோலாலம்பூர், ஜூன் 13:
துன் மகாதீர் தலைமையேற்கும் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்கள் குறித்து வெளிவந்த பட்டியல் ஊடகவியலாளர்களின் கணிப்பு. அது அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் அல்ல என பிகேஆர் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

இவை ஊடகக் கணிப்புகள். இந்தப் பட்டியல் உண்மையானதா என தெரியாமல், அதுகுறித்து மேல்விவரம் தர இயலாது என அவர் சொன்னார். 

சேவியர் நீர், நில, இயற்கை வள அமைச்சராக நியமிக்கப்படுவார் என அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. தெரேசா கொக் கூட்டரசுப் பிரதேச அமைச்சராகவும், யோ பி யீ எரிசக்தி, தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அமைச்சராகவும் நியமிக்கப்படுவார் என ஊகிக்கப்பட்டது. 



FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.