12:45:42
Monday
20 August 2018

தேமுவை கலைத்து விடலாம்; அம்னோ ஒன்றே போதும்!

தேமுவை கலைத்து விடலாம்; அம்னோ ஒன்றே போதும்!
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13:

தேசிய முன்னணியின் (தேமு) உறுப்புக் கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக பிரிந்து செல்வதால், இனி அக்கூட்டணிக் கட்சி கலைக்கப்படுவதே சிறந்தது என டத்தோஶ்ரீ நஸ்ரி அசிஸ் தெரிவித்தார். 

சவால்மிக்க இந்தத் தருணத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தேமுவை கலைத்து விட்டு, அம்னோ மட்டுமே தீபகற்ப மலேசியாவில் போட்டியிடும். 

மே 9ஆம் தேதி மசீச, மஇகா, கெராக்கான் ஆகிய கட்சிகள் தோல்வியைத் தழுவிய பின்னர், தேசிய முன்னணி மீட்சி காண்பது கடினம் என்றார் அவர். 

நேற்று (ஜூன் 12), சரவாக்கில் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளாக இருந்த 4 கட்சிகள் தேமுவிலிருந்து வெளியேறின. ஆகையால், அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான் ஆகிய கட்சிகள் மட்டுமே தேமுவில் உள்ளன. மைபிபிபி அங்கும் இங்குமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.