12:45:51
Monday
20 August 2018

திருமுறை ஓதும் பயிற்சி அளிக்க சிதம்பரத்திலிருந்து ஓதுவார் மலேசியா வருகை!

திருமுறை ஓதும் பயிற்சி அளிக்க  சிதம்பரத்திலிருந்து ஓதுவார் மலேசியா வருகை!
தேவார இசைமணி சி.சிவக்குமார், உலக தர விருதுகளைப் பெற்ற ஓதுவார் மற்றும் சிதம்பரம் ஆளவை அன்னால் தேவாரப் பாடசாலையின் முழு நேர பயிற்றுநர்கள் ஆகியோர் இந்த வகுப்புகளை நடத்த விருக்கின்றனர்.

இந்த நிகழ்வு ஒரு தனித்தன்மைமிக்கது. இந்தியாவைத் தவிர்த்து உலகில் வேறெங்கும் இதுபோன்ற பயிற்சிகள் நடைபெறவில்லை. தரமிக்க சமய ஆசான்களை உருவாக்கி அவர்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு திருமுறையை எவ்வாறு ஓதவேண்டுமோ அவ்வாறே ஓதுவதற்கு இந்தப் பயிற்சி வழிவகுக்கும்.

நாட்டில் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் விவகாரம், நாடு முழுமையிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சமய வகுப்புகளை நடத்துவது பற்றியாகும். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் பட்சத்தில் சிறந்த சமய வகுப்புகளை நடத்த அதிகளவு ஆசிரியர்கள் தேவைப்படுவர்.

இந்தத் தேவையை நிறைவு செய்யும் வகையில், 2 ஆண்டு கால சான்றிதழ் பயிற்சி ஒன்று கடந்த மே மாதம் தொடங்கி தலைநகரில் உள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் ஒவ்வொரு மாதமும் 10 நாட்களுக்கு இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை நாள்தோறும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த வகுப்புகள் மீண்டும் ஜூன் 15 தொடங்கி 24ஆம் தேதி நடைபெறவுள்ளன. விவேகானந்த ஆசிரமத்தின் ஆதரவுடன் அர்த்த ஞான மையமும் ஆளால சுந்தரமூர்த்தி நாயனார் அர்ச்சகர் சங்கமும் இணைந்து இந்த பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளன.

நாட்டில் நமது சமயத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், இந்து இளைஞர் இயக்கம், ருத்ரா தேவி சமாஜம், தவநெறி மன்றம் ஆகிய அமைப்புகள் ஆதரவு நல்கி வருகின்றன. 

முன்பதிவு அவசியம். 012-3025643 / 012-6169322 என்ற எண்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேல்விபரங்களுக்கு  www.arthanyana.org என்ற அகப்பக்கத்தையும் வலம் வரலாம்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.