12:46:00
Monday
20 August 2018

3ஆவது உலக யோகா தினம் 2018

3ஆவது உலக யோகா தினம் 2018
உலக யோகா தினத்தை முன்னிட்டு, வரும் 24.6.2018ஆம் தேதி காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை சிரம்பான் நகர மண்டபத்தில், இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் சிரம்பான் கம்பன் கழக ஏற்பாட்டில் '3ஆவது உலக யோகா தினம் 2018' நடைபெறவுள்ளது. 

பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் யோகாசனம் பயிற்றுவிக்கப்படும். 7 வயது முதல் பெரியோர் வரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

முன்னரே பதிந்து கொள்ளும் நபர்களுக்கு, டி-சட்டை வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் பதிந்து கொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை. பங்கு கொள்ளும் நபர்கள் யோகாசன இருக்கையை (Mat) உடன் கொண்டு வரவேண்டும். 

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கி, யோகாசனத்தைப் பெருமைப்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும். 

எனவே பொதுமக்கள் தவறாது கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம் என்று சிரம்பான் கம்பன் கழகத் தலைவர் என்.துளசி அண்ணாமலை கேட்டுக்கொள்கிறார்.

மேலும் விபரங்கள் அறிய 016-9788567, 010-2550875 என்ற எண்களை அழைக்கவும்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.