15:24:18
Tuesday
23 October 2018

தேமு கலைக்கப்பட வேண்டுமா? ஸாஹிட் வந்ததும் முடிவு

தேமு கலைக்கப்பட வேண்டுமா? ஸாஹிட் வந்ததும் முடிவு
கோலாலம்பூர், ஜூன் 12: நாட்டின் அரசாங்கமாக கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றிய தேசிய முன்னணி கலைக்கப்பட வேண்டும் என்றால் என்னதான் செய்வது? இது குறித்து விரைவில் நாடு திரும்பவிருக்கும் டத்தோஶ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடியுடன் மேற்கொண்டு கலந்து பேசுவேன் என தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் கூறினார். 

இன்றைய அரசியல் சூழலில் தனித்து நிற்க வேண்டுமா, கூட்டணிக்குத் தயாராக வேண்டுமா என்பதை அம்னோ ஆய்வு செய்யும் எனவும் அவர் சொன்னார். 

நாம் வீழ்ச்சிக் காண்கிறோம் என்றால், எப்போதுமே ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால், இவர்களின் உண்மையான நோக்கம் இப்போது தெரிந்துவிட்டது. மக்களுடனும் நாட்டுடனும் போராடுவதுதான் உறுப்புக் கட்சிகளின் கொள்கையாகும்  என தெங்கு அட்னான் மேலும் சுட்டிக் கட்டினார். 

சரவா தேசிய முன்னணியிலிருந்து 4 கட்சிகள் வெளியேறியது தொடர்பில் கருத்து கேட்கப்பட்டபோது தெங்கு அட்னான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.