19:52:11
Tuesday
19 February 2019

கசானா நேஷனல் தலைவர் பதவியிலிருந்து டத்தோஶ்ரீ நஜிப் விலகல்

கசானா நேஷனல் தலைவர் பதவியிலிருந்து  டத்தோஶ்ரீ நஜிப் விலகல்
கோலாலாம்பூர், ஜூன் 1:
கசானா நேஷனல் நிறுவனத்திலிருந்து டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் உட்பட மேலும் இரு முன்னாள் அமைச்சர்கள் விலகிக் கொண்டனர். 

நஜிப் நேற்று மே 31ஆம் தேதியோடு அந்நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதாக அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. 

டத்தோஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி மே 30ஆம் தேதியும், டான்ஶ்ரீ இர்வான் செரிகார் மே 23ஆம் தேதியும் பதவி விலகியுள்ளனர். 

கசானா நேஷனல் நிறுவனம் தொலைத்தொடர்பு, நிதி நிறுவனங்கள், சுகாதாரத்துறை, வான்படை, உள்கட்டமைப்பு, சுற்றுலா, சொத்துடமை, ஊடகம் போன்ற துறைகளில் சம்பந்தப்பட்ட நிதி வளங்களை உட்படுத்தியது. 

இந்நிறுவத்தின் முதலீட்டாளர்களாக டெலிகாம் மலேசியா, தெனாகா நேஷனல், சிஐஎம்பி, அக்சியாத்தா, ஐஎச்எச் சுகாதார நிறுவனம், மலேசிய ஏர்போர்ட்ஸ், யுஇஎம் சன்ரைஸ் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.