15:00:37
Tuesday
23 October 2018

டத்தோஶ்ரீ மெக்லினுக்கு முழு ஆதரவு: மைபிபிபி இளைஞர் படை உறுதி

டத்தோஶ்ரீ மெக்லினுக்கு முழு ஆதரவு: மைபிபிபி இளைஞர் படை உறுதி
கோலாலம்பூர், மே 22: 
மைபிபிபியின் இடைகால தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ மெக்லின் டி'குருஸ் அவர்களுக்கு மைபிபிபி இளைஞர் அணி 100 விழுக்காடு ஆதரவு வழங்குவதாக அதன் தலைவர் சத்தியா சுதாகரன் தெரிவித்தார். 

2014ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட உச்சமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக மைபிபிபி இளைஞர் அணி செயல்படும். அதோடு, தேசிய முன்னணியுடன் இணைந்து வலுவான எதிர்க்கட்சியை அமைத்து மைபிபிபி மக்களுக்காக போராடும் என்றார் அவர். 

இதனிடையே, 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பக்காத்தான் ஹராப்பானுக்கும், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களுக்கும் மைபிபிபி இளைஞர் அணி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக சத்தியா கூறினார்.  


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.