12:49:35
Monday
20 August 2018

60 வருட தேமு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: ஏழாவது பிரதமராக மீண்டும் துன் மகாதீர்!

60 வருட தேமு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: ஏழாவது பிரதமராக மீண்டும் துன் மகாதீர்!
கோலாலம்பூர், மே 10:

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைப்பதை அக்கூட்டணியின் அவைத்தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்வழி தான் பிரதமராகப் பதவியேற்பதாகவும், டாக்டர் வான் அசிசா துணைப் பிரதமராகப் பதவியேற்பார் என்றும் மகாதீர் அறிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் மத்திய அரசை அமைக்க போதிய தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளதால், தேசிய முன்னணியின் 60 வருட ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவித்திருந்ததன்படி, இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் பொதுவிடுமுறை என்றும், அடுத்து வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையைச் சேர்த்து மலேசியர்களுக்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை என்றும் மகாதீர் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு வெற்றியடைந்தவர்களுக்கு ஓய்வு இருக்காது; விறுவிறுப்பாக பணிகள் நடைபெறும் என மகாதீர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.



FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.