23:58:24
Friday
20 July 2018

ஏப்ரல் 29இல் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுக்கூட்டம்

ஏப்ரல் 29இல் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுக்கூட்டம்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் 56ஆவது ஆண்டுக்கூட்டம் 29.4.2018ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு, கோலாலம்பூர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெறும்.


வழக்கம்போல் இவ்வாண்டும் மூன்று எழுத்தாளர்களுக்கு சான்றோர் நினைவாக தங்க விருதுகள் சூட்டி கௌரவிக்கப்படும். செந்தமிழ்ச் செல்வர் சீ.வி.குப்புசாமி விருது பிரபல எழுத்தாளரும் ஆய்வாளருமான மலாக்கா முத்துக்கிருஷ்ணனுக்கும் முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் விருது எழுத்தாளரும் பத்திரிகையாளரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பொருளாளருமான ஞான சைமனுக்கும்  சமூகக் கலைமணி சா.ஆ. அன்பானந்தன் விருது நீலாய் எழுத்தாளரும் தமிழாசிரியருமான திருமதி கோவி. தமிழ்ச்செல்விக்கும் வழங்கப்படவிருக்கிறது என்று எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் மோகனன் பெருமாள் கூறியுள்ளார்.


ஆயுள் உறுப்பினர்களுக்கும்  2018ஆம் ஆண்டுக்கான சந்தா செலுத்தி உறுப்பியத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்களுக்கும் சங்கத்தின் ஆண்டறிக்கை தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. முகவரி  மாறியுள்ளவர்களும் ஆண்டறிக்கைக் கிடைக்காத உறுப்பினர்களும்  சங்கச் செயலாளர் திருமதி விஜயராணியுடன் 012-6392474 அல்லது தம்முடன் 017-7008189 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் மோகனன் பெருமாள் கேட்டுக் கொண்டார்.



முதல் அங்கம் ஆண்டுக்கூட்டத்தின் விழாவோடு விருதளிப்பு விழாவாகவும் இரண்டாம் அங்கம் வழக்கமான ஆண்டுக் கூட்ட நிகழ்வுகளைக் கொண்டிருக்கும் என்றும் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து சிறப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.