13:53:03
Friday
21 September 2018

ஏப்ரல் 28ஆம் தேதிக்கு முன்னரே தேமு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்

ஏப்ரல் 28ஆம் தேதிக்கு முன்னரே  தேமு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்
புத்ராஜெயா, ஏப். 16: 14ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பு ஏப்ரல் 28ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வேளை, தேசிய முன்னணி அதன் வேட்பாளர் பெயர் பட்டியல் குறித்து 7 முதல் 10 நாள்களுக்கு முன்னரே அறிவிக்கும் என அம்னோவின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் தெரிவித்தார். 

எனினும், இந்த முன் அறிவிப்புக்கான தேதி குறித்து கட்சியின் தலைவரான டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்னும் முடிவு செய்யவில்லை என அவர் சொன்னார். 

இந்நிலையில், வேட்பாளர் அறிவிப்பு நாளின் 10 நாட்களுக்கு முன்னர் தேமு அதன் முன்னறிவிப்பை செய்யலாம் என புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேச அளவிலான தரமான கல்வி விருது வழங்கும் நிகழ்விற்கு பின்னர் அவர் கூறினார். 

இதனிடையே தேமு வேட்பாளர் நியமனத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த அவர், மக்களுக்கு விருப்பமான அவர்கள் கேட்கும் நபரையே தேமுவின் வேட்பாளராக நியமித்திருப்பதாகவும் கட்சியின் விருப்பத்தினால் அல்ல எனவும் அவர் தெளிவுப்படுத்தினார். 

கட்சிக்கு வெற்றி ஈட்டித்தரக்கூடியவரே வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேமுவின் தேர்தல் கொள்கை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட உத்தரவாத அம்சங்களை செயல்படுத்தும் திறனுடையவரே வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.