19:03:39
Tuesday
19 February 2019

ஏப்ரல் 4ஆம் தேதி தொடக்கம் 24 மணி நேர ஒலிபரப்பாகிறது ராகா

ஏப்ரல் 4ஆம் தேதி தொடக்கம்  24 மணி நேர ஒலிபரப்பாகிறது ராகா
நாளை ஏப்ரல் 4ஆம் தேதி தொடக்கம் ரசிகர்கள் இனி 24 மணி நேரத்திற்கு ராகா வானொலியில் ஒலியேறும் நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் கேட்டு மகிழலாம். ஆஸ்ட்ரோ வானொலியின் கீழ் இயங்கும் நாட்டின் முன்னணி தமிழ் வானொலி நிலையமான ராகா 1.4 மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ராகா அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா, சுரேஷ், ராம், ரேவதி, அகிலா, கவிமாறன், கீதா, ஷாலு, ஜெய், யாசினி ஆகியோர் தொகுத்து  வழங்கும் நிகழ்ச்சிகளைக் கேட்க மறவாதீர்கள்.

அதுமட்டுமின்றி, அதிகாலை 2.00 மணி தொடக்கம் காலை 6.00 மணி வரை இடைவிடாத பாடல்களை ரசிகர்களுக்காக ராகாவில் ஒலியேற்றவுள்ளது. மேல் விவரங்களுக்கு raaga. my அகப்பக்கத்தை நாடுங்கள்.    




FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.